இது கூட தெரியாமலா படம் பண்ண கூப்பிட்டாரு!. தனுஷுக்கு ஷாக் கொடுத்த மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர்…

Published on: March 11, 2024
dhanush
---Advertisement---

சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். இது ஒரு மலையாள மொழி திரைப்படம் என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 2 வாரங்கள் முடிந்து 3 வாரம் துவங்கியிருக்கிறது.

ஆனாலும், வார இறுதிகளில் இப்படம் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்று வருகிறது. தமிழகத்தில் இந்த படத்திற்கு தியேட்டர்களும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 15 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. உலக அளவில் ரூ.100 கோடி வசூலை தாண்டிவிட்டது.

இதையும் படிங்க: மகன் வயது நடிகருடன் மஜா பண்ணும் பிரபல நடிகை!.. அந்த நடிகையோட சேர்ந்து சுத்துறாரே நயன்தாரா!..

கமல்ஹாசன் நடித்து 1991ம் வருடம் வெளிவந்த குணா படம் எடுக்கப்பட்ட குகையை கதைக்கருவாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கொச்சினிலிருந்து கொடைக்கானலுக்கு குணா குகையை பார்க்க போகும் நண்பர்களில் ஒருவர் ஒரு குழியில் விழுந்துவிட அவரை மீட்டார்களா என்பது படத்தின் கதை.

பொதுவாக ஒரு அறிமுக இயக்குனரிடம் படம் ரூ.100 கோடி வசூலை தாண்டிவிட்டால் மற்ற நடிகர்கள் அந்த இயக்குனருக்கு வலை விரிப்பார்கள். அப்படித்தான் நடிகர் தனுஷ் மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பேசினார். அதோடு, நாம் இணைந்து படம் செய்வோம் என சொல்லி இருந்தார்.

இதையும் படிங்க: படம்தான் தக் லைஃப்!.. நிஜத்தில் காஸ்ட்லி லைஃப்!. மணிரத்னத்தின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?!..

யாரடி நீ மோகினி போல ஒரு காதல் கதையை அவரிடம் உருவாக்க சொல்லி இருக்கிறார் தனுஷ். அதோடு, இயக்குனரின் சிதம்பரம் என்பதால் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என நினைத்துவிட்டார். ஆனால், சிதம்பரமோ ‘நான் கேரளாவை சேர்ந்தவன். இங்குள்ள கலாச்சாரம் பற்றி எனக்கு அதிகமாக தெரியாது. எனவே, உடனடியாக ஒரு தமிழ் படத்தை இயக்குவது என்பது என்னால் முடியாது. இன்னும் ஒரு மலையாள படத்தை இயக்கிவிட்டு உங்களிடம் வருகிறேன்’ என சொல்லிவிட்டாராம்.

அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும். அதன்பின் தனுஷும் சிதம்பரமும் இணைவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தனுஷை போலவே நடிகர் சியான் விக்ரமும் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.