Connect with us

Cinema News

அச்சச்சோ!.. மஞ்சுமெல் பாய்ஸ் ஹீரோ இந்த தமிழ் இயக்குநரிடமா சிக்கி விட்டார்.. என்ன ஆகப்போகுதோ?

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் ஹீரோ என்றால் அது குழியில் சிக்கிக் கொண்டு ஒட்டுமொத்த படத்தையும் பல காட்சிகளில் இல்லாமலே நகர்த்திக் கொண்டு போன அந்த சுபாஷாக நடித்து அசத்திய ஸ்ரீநாத் பாஸி தான்.

2011ம் ஆண்டு வெளியான பிரணயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் ஸ்ரீநாத் பாஸி. உஸ்தாத் ஹோட்டல், ஹனிபீ, மசாலா ரிபப்ளிக், தி லாஸ்ட் சப்பர், பரவ, கும்பலாங்கி நைட்ஸ், வைரஸ், அஞ்சம் பாதிரா, டிரான்ஸ், ஹோம், பீஷ்ம பர்வம், மஞ்சுமெல் பாய்ஸ் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: எம்ஜிஆரின் திறமையை ஒரு படி மேலாக எடுத்து சென்ற படம்.. தலைகுணிந்து வணங்கிய நடிகை

இயக்குநர் சிதம்பரத்திடம் கிளைமேக்ஸில் குணா படத்தின் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல” என்கிற பாடலையே அந்த இடத்தில் வைக்கலாம் என்கிற ஐடியா கொடுத்ததே இவர் தானாம்.

அந்த குளிக்குள் விழுந்து அத்தனை அடி, காயங்கள் பட்டு உயிருக்குப் போராடும் நபராக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் அடுத்து தனுஷை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: இது கூட தெரியாமலா படம் பண்ண கூப்பிட்டாரு!. தனுஷுக்கு ஷாக் கொடுத்த மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர்…

இந்நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் உருவாகும் ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஸ்ரீநாத் பாஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பையே வெளியிட்டுள்ளனர்.

தங்கலான் படத்திலேயே சியான் விக்ரமை அந்த பாடு படுத்தி எடுத்து விட்டார். இப்போ ஸ்ரீநாத் பாஸி சிக்கியிருக்கும் நிலையில், என்ன பண்ணப் போகிறாரோ பா. ரஞ்சித் என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top