Cinema History
சிவாஜியின் ஹிட் படத்தை பார்த்து எம்.ஜி.ஆருக்கு வந்த ஆசை!.. கடைசி வரைக்கும் நடக்காம போச்சே!…
தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மட்டுமே அதிக கெட்டப்புகளில் நடித்திருக்கிறார்கள்., எம்.ஜி.ஆர் அதிகபட்சம் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். சிவாஜியோ தெய்வ மகன் படத்தில் 3 கெட்டப்புகளிலும், நவராத்திரி படத்தில் 9 வேடங்களிலும் நடித்திருந்தார். இதுபோக பல திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் அசத்தி இருக்கிறார்.
தெய்வ மகன் படத்தில் ஒருவர் ஏதும் அறியாத பணக்கார இளைஞர். மற்றொருவர் அசிங்கமான முக தோற்றத்தை கொண்ட முரட்டு வாலிபன், மற்றொருவர் இவர்கள் இரண்டு பேருக்கும் அப்பா என அசத்தி இருப்பார். அதுவும் ஒரு காட்சியில் 3 பேரும் சேர்ந்து வருவது போலவும் காட்சிகள் வரும்.
இதையும் படிங்க: ஒரு பாட்டுக்கு நடனமாட ஒரு மாதம் பயிற்சி எடுத்த எம்.ஜி.ஆர்!.. தலைகுணிந்து வணங்கிய நடிகை…
அந்த மூன்று வேடங்களிலிலும் தனித்தனியாக அசத்தி இருப்பார் சிவாஜி. இப்படி 19 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்தான் நடிகர் திலகம் சிவாஜி. சிவாஜிக்கு போட்டி நடிகராக இருந்தவர்தான் எம்.ஜி.ஆர், சிவாஜி போல சிறந்த நடிப்பு, செண்டிமெண்ட் காட்சிகளில் உருகி நடிப்பது என்பது தனக்கு செட் ஆகாது என்பதை புரிந்து தனக்கென ஒரு பாணியை கடைபிடித்தவர்.
ஏழைகளுக்காக போராடுவது, மக்களுக்கு புத்திமதி சொல்வது, அதிகாரவர்க்கதை எதிர்த்து குரல் கொடுப்பது, மக்கள் பக்கம் நிற்பது என வேறுமாதிரி தன்னை புரமோட் செய்து கொண்டவர் அவர். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தால் சிவாஜியின் புகழ் உயரே சென்றது. வரலாற்று கதைகளில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார் சிவாஜி.
இதையும் படிங்க: பாரதிராஜாவிடம் ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. கடைசி வரை நிறைவேறாமல் போன சோகம்!…
இது எம்.ஜி.ஆரை யோசிக்க வைத்தது. எனவே, தானும் அதுபோல ஒரு வரலாற்றுக்கதையில் நடிக்க அசைப்பட்டார். உடனே கண்ணதாசனை அழைத்து தன்னுடைய ஆசையை சொன்னார். அவருக்கு ஊமைத்துரை என்கிற கதாபாத்திரத்தை வைத்து ஒரு கதை சொன்னார் கண்ணதாசன். எம்.ஜி.ஆருக்கு அது மிகவும் பிடித்துப்போனது.
ஊமையன் கோட்டை என தலைப்பு வைக்கப்பட்டு நாளிதழில் விளம்பரமும் வெளியானது. மக்களிடம் பெரிதாக பேசப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக இப்படம் கைவிடப்பட்டது. இப்படி எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்கள் அறிவிப்பு வெளியாகி அதன்பின் நின்று போனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோடியை தாண்டி வசூல் செய்த முதல் படம்!.. அப்பவே மாஸ் காட்டிய எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..