Cinema History
அசிங்கமாக கேலி செய்த சொந்த ஊர்க்காரர்கள்!.. எம்.ஜி.ஆர் வளர்ந்த பின் நடந்தது இதுதான்!..
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிறுவயதில் பல இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்தவர். பின்னாளில் அதையே வைராக்கியமாகக் கொண்டு முன்னேறிக் காட்டினார் என்றால் அது மிகையில்லை.
எம்ஜிஆர் பிறப்பால் ஒரு மலையாளி. அவருக்கு தன் சொந்த ஊரான கேரளாவுக்குப் போக விருப்பமே இல்லை. ரொம்பவும் அரிதாகத் தான் அங்கே செல்வாராம். அதே போல அவர் மலையாளத்தில் பேசியதையும் நாம் பார்த்திருக்க முடியாது. தன்னோட வாழ்நாள் முழுவதும் தன்னை ஒரு தமிழனாகவே நினைத்தாராம் எம்ஜிஆர்.
தன் சிறுவயதில் தாயார் சத்யபாமாவுக்கு நேர்ந்த அவமானம் மற்றும் தனது அண்ணன் சக்கரபாணிக்கும் நேர்ந்த அவமானத்தாலும் தனது சொந்த ஊரை வெறுத்தாராம். எம்ஜிஆரின் தாயாருக்கு கேரளாவின் பாலக்காடு அருகில் கொல்லங்கோடு பக்கத்தில் உள்ள வடவனூர் தான் சொந்த ஊர். அங்கு இருந்த மருதூர் என்ற பெரிய வீட்டில் தான் அவர்கள் பிறந்தாங்க. எம்ஜிஆர் நடிகரானதும் அண்ணனுடன் சேர்ந்து அந்தக் கிராமத்திற்குப் போனாராம்.
சிறுவர்கள் எல்லாரும் எம்ஜிஆர் வாராருன்னு கொண்டாடுனாங்களாம். ஆனால் அந்த ஊர் பெரியவங்க எல்லாம் இந்தக் கூத்தாடிகளுக்கு வேற வேலை இல்லைன்னு எம்ஜிஆர் காதுபடவே சொன்னாங்களாம்.
இது அவரது மனதில் பெரிய வடுவாக இருந்ததாம். ஆனால் அவர் வளர்ந்த நடிகரானதும் அதே ஊர்க்காரங்க எம்ஜிஆரை சந்திக்க சென்னை வந்தார்களாம். அவங்க எம்ஜிஆரிடம் நிதி உதவி வேண்டி வந்தாங்க. நம்ம ஊருல பெரியவங்களுக்கு எல்லாம் மகிழ சபான்னு ஒரு கட்டடம் கட்ட இருக்கிறோம். அதற்கு நீங்க நிதி உதவி செய்யணும்னு கோரிக்கை வச்சாங்க.
இதையும் படிங்க… விஜயின் குரலுக்கு இவ்ளோ விலையா? ‘கோட்’ படத்தில் நடக்கும் பஞ்சாயத்து.. மாட்டிக்கிட்டு முழிக்கும் ஏஜிஎஸ்
அதற்கு எம்ஜிஆர், தனிப்பட்ட ஒரு இனத்திற்காக நான் நிதி உதவி செய்ய முடியாது. எல்லாருக்கும் பொதுவா ஒரு கட்டடம் கட்டுங்க. அதுக்கு என் தாயார் பெயரை வைத்தால் பண உதவி செய்றேன்னாரு. ஆனால் வந்திருந்த ஊர்க்காரங்க அதை ஒத்துக்கொள்ளாமல் திரும்பி போய்விட்டார்களாம்.