Cinema History
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 100 கோடிக்கும் மேல் கல்லா கட்டிய திரைப்படங்கள்!.. மாஸ் காட்டும் ஜெயிலர்..
சன் பிக்சர்ஸ் 2008ல் சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியது. இதுவரை 10 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. என்னென்ன படங்கள்னு பார்ப்போமா…
எந்திரன்
2010ல் வந்த எந்திரன் படத்தை முதலில் தயாரித்தது. டைரக்டர் ஷங்கர், ரஜினி ரெண்டாவது முறையாக இணைந்தனர். இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. முதலில் வந்த சிவாஜி படம் செம மாஸாக இருந்தது. இது ஒரு சயின்ஸ் படமாக இருந்தாலும் எல்லோருக்கும் புரியுற மாதிரி எளிமையாக எடுத்திருந்தார். இந்தப் படத்தோட பட்ஜெட் 150 கோடி. உலகளவில் 300 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலை வாரிக்குவித்தது. சன் பிக்சர்ஸ்க்கு முதல் படமே மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்தது.
சர்க்கார்
ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் காம்போவில் 3வது முறையாக வந்த படம் சர்க்கார். துப்பாக்கி, கத்தி என இரு படங்களுமே செம மாஸ். அதனால் இந்தப் படத்திற்கும் ரொம்ப எதிர்பார்ப்பு இருந்தது. இந்தப் படத்தோட வசூல் 260 கோடி. இது சன்பிக்சர்ஸ் தயாரிப்பு.
2019ல் ரஜினியின் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. ரஜினியின் 165வது படம். கார்த்திக் சுப்புராஜ் முதல் முறையாக ரஜினியுடன் கைகோர்த்துள்ளார். அனிருத்தின் பாடல்கள் செம மாஸ். சண்டைக்காட்சிகளும் சும்மா பொளந்து கட்டியது. இதன் பட்ஜெட் 85 கோடி. வசூல் 150 கோடி.
காஞ்சனா 3
2019ல் சன்பிக்சர்ஸ் தயாரித்த படம். ராகவா லாரன்ஸ்சும் சேர்ந்து தயாரித்துள்ளார். இவர் தான் இயக்கி ஹீரோவாகவும் நடித்தார். 50 கோடிக்கும் குறைவான செலவில் தயாரானது. வசூல் உலகளவில் 130 கோடி.
2019 செப்டம்பரில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. பாண்டிராஜ் இயக்க, டி.இமான் இசை அமைத்தார். படம் கலவையான விமர்சனம் தந்தது. 40 கோடியில் தயாரான இந்தப் படம் உலகளவில் 70 கோடியை வசூலித்தது. இது ஆவரேஜ் ஹிட்.
அண்ணாத்த
2021ல் சிறுத்தை சிவா ரஜினியுடன் கைகோர்த்த படம் அண்ணாத்த. டி.இமான் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு. 180 கோடி செலவு. 240 கோடி வசூல். இது ஆவரேஜ் ஹிட்.
2022ல் வெளியான எதற்கும் துணிந்தவன். சூர்யாவின் 40வது படம். பாண்டிராஜ் டைரக்ட் செய்தார். டி.இமான் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் 75 கோடியில் தயாரித்தது. உலகளவில் 200 கோடி வரை வசூலித்ததாம்.
பீஸ்ட்
2022 ஏப்ரல் மாதம் விஜயின் பீஸ்ட் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்தது. இது விஜயின் 65வது படம். இதை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருந்ததாம். அவர் சம்பளத்தைக் குறைக்காததால் நெல்சன் திலீப்குமார் இயக்கினாராம். அனிருத் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. 150 கோடி பட்ஜெட். வசூல் 250 கோடிக்கும் மேல.
2022 ஆகஸ்ட் மாதம் தனுஷின் 44வது படமான திருச்சிற்றம்பலத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கினார். அனிருத் இசையில் பாடல்கள் செம ஹிட். 30 கோடி ரூபாய்க்கும் குறைவான செலவு. ஆனால் 110 கோடி கலெக்ஷனை அள்ளியது.
ஜெயிலர்
2023ல் வெளியான ஜெயிலர் தான் சன் பிக்சர்ஸ்க்கு கடைசியாக வந்த படம். ரஜினியின் 169வது படம். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. 200 கோடி பட்ஜெட். ஆனால் உலகளவில் வசூல் 600 கோடிக்கும் மேல. இதுவரை மிகப்பெரிய வசூலை எந்தப் படமும் சன் பிக்சரஸ்க்குக் கொடுக்கவில்லையாம்.
ராயன்
தனுஷின் 50வது படமான ராயன் தான் சன்பிக்சர்ஸின் அடுத்த படைப்பு. பவர் பாண்டிக்குப் பிறகு தனுஷ் இயக்கி நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்பட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதுவும் கண்டிப்பாக சன்பிக்சர்ஸ்க்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும் என்றே தெரிகிறது.