Cinema History
ரஜினி என்னை ரூமுக்கு கூப்பிட்டார்!.. போனா சரக்கடிக்க சொன்னார்!.. காமெடி நடிகர் பேட்டி!..
நடிகர் ரஜினிகாந்துக்கு பல வருடங்கள் மதுப்பழக்கம் இருந்தது எல்லோருக்கும் தெரியும். ஒரு நட்சத்திர ஹோட்டலில் இவருக்கென ஒரு தனி அறையே இருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் தினமும் மாலை மது அருந்தும் பழக்கம் ரஜினிக்கு இருந்தது. எப்போதும் தனியாகவே மது அருந்தும் ரஜினி சில சமயம் கம்பெனிக்கு மற்ற நடிகர்களுடன் சேர்ந்தும் மது அருந்துவார்.
பல வருடங்கள் கழித்தே அந்த பழக்கத்தை விட்டார் ரஜினி. இதை அவரே பல பேட்டிகளிலும் சொல்லி இருக்கிறார். அதற்கு காரணம் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதுதான். சிறுநீரகம் செயல் இழந்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன்பின்னர் மது அருந்தும் பழக்கத்தை விட்டுவிட்டார். அதோடு, புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் அவர் விட்டுவிட்டார். அதோடு, குடிப்பழக்கதை விட்டு விடுங்கள் என அவரின் ரசிகர்களுக்கு அறிவுரையும் சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: இதற்காக தான் நடிப்பில் இறங்கினேன்… அந்த விஷயம் நல்லா இருக்கும்.. ஓபனாக சொன்ன கௌதம் மேனன்!
தமிழ் சினிமாவில் வெண்ணிற ஆடை படம் மூலம் நடிக்க துவங்கியவர் மூர்த்தி. இந்த படத்திற்கு பின் வெண்ணிற ஆடை மூர்த்தி என அழைக்கப்பட்டார். நகைச்சுவை காட்சிகள் இரட்டை அர்த்தத்தில் வசனம் பேசுவதில் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. இயக்குனரே வேண்டாம் என்றாலும் கேப் கிடைக்கும்போது ஒரு வசனத்தை பேசிவிடுவார்.
இதை ரசிகர்களும் பல படங்களில் பார்த்திருப்பார்கள். இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ஒரு படத்தில் ரஜினியுடன் நடித்தேன். படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. ஷூட்டிங் முடிந்து மாலை என்ன செய்வீர்கள் என ரஜினி கேட்டார். நான் ஒன்றும் செய்ய மாட்டேன். அறையில் சும்மாதான் இருப்பேன். மது அருந்துவேன்’ என சொன்னேன்.
அப்படியெனில் ரெடியாக இருங்கள்.. கார் அனுப்புகிறேன் என சொன்னார். சொன்னபடியே கார் வந்தது. அவரின் அறைக்கு போனேன். அவரே வந்து கதவை திறந்தார். இருவரும் மது அருந்தி கொண்டே 2 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். இந்த அறையில் யாருமில்லை.
இதையும் படிங்க: என்னங்க இவரு மறுபடியும் கிளம்பிட்டாரு போலயே… அஜித்தால் புலம்பும் ஆதிக்…
இதை பயன்படுத்தி நீங்கள் நடிக்கும் படங்களில் வாய்ப்பு கேட்க மாட்டேன். அதேபோல், நீங்கள் நடிக்கும் படங்களில் வாய்ப்பு வந்தால் அதை நீங்கள் தடுத்துவிடாதீர்கள்’ என சொன்னேன். என்னிடம் பல விஷயங்கள் பேசினார். ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கி கொடுத்தார். அதன்பின் என்னை எனது அறையில் விட்டு விட்டு சென்றுவிட்டார்.
அவருடன் அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதேநேரம், மிகவும் பண்பான மனிதர் அவர்’ என வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியிருந்தார். பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிப்பதை மூர்த்தி நிறுத்திவிட்டார். அதோடு, அமெரிக்காவிலும் செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் இந்தியா வந்த மூர்த்தி சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.