Connect with us
sundar c

Cinema News

இந்த பாட்டுக்கு இதுதான் சார் அர்த்தம்!. ரஜினிக்கே விபூதி அடித்த சுந்தர் சி!.. அடங்கோ!..

உள்ளத்தை அள்ளித்தா போன்ற காமெடி கலந்த காதல் கதைகளை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர் சி. மினிமம் பட்ஜெட், குறைந்த நாட்கள் படப்பிடிப்பு, அதிக லாபம் என்பதுதான் சுந்தர் சியின் கொள்கை. பல படங்களில் அதை நிரூபித்தும் காட்டி இருக்கிறார். எல்லோரும் கார்த்திக்கை வைத்து படமெடுக்க யோசித்தபோது தைரியமாக அவரை வைத்து தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் இவர்.

சுந்தர் சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. கவுண்டமணி, செந்தில், சந்தானம், மணிவண்ணன், விவேக், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களையும் தனது படங்களில் பயன்படுத்தி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் இவர். அதிலும், வடிவேலுவை வைத்து வின்னர் மற்றும் கிரி ஆகிய படங்களில் அவர் உருவாக்கிய காமெடி காட்சிகள் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.

இதையும் படிங்க: லால்சலாம் படம் தோல்விக்கு காரணமே அப்பாதான்!.. பகீர் பேட்டி கொடுத்த ஐஸ்வர்யா!..

இவர் ரஜினியை வைத்து இயக்கிய ஒரே திரைப்படம் அருணாச்சலம். இந்த படத்தை தயாரித்ததும் ரஜினிதான். இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தை நடிகர் விகே ராமசாமி உள்ளிட்ட சிலருக்கு பகிர்ந்து கொடுக்க திட்டமிட்டே இப்படத்தை எடுத்தார் ரஜினி. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார்.

மேலும், தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விசு முக்கிய வேடத்திலும், வில்லனாக ரகுவரனும் நடத்திருந்தனர். ரஜினி படம் என்றால் அவர் அறிமுகமாகும் பாடல் காட்சி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இந்த படத்திலும் அப்படி ஒரு பாடல் இடம் பெற்றது.

song

அதுதான் ‘அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா’ என்கிற பாடல். இந்த பாடலை கேட்ட ரஜினிக்கு அர்த்தம் புரியவில்லை. எனவே, சுந்தர் சியிடம் இதற்கு என்ன அர்த்தம் என கேட்டிருக்கிறார். அதற்கு பதில் சொன்ன சுந்தர் சி ‘சார் மேலே வானம். கீழே பூமி.. கடவுள் மனிதன் எல்லாம் ஒன்னுதான் நாம் சிவன் கோவில் இந்த பாடலை எடுப்பதால் அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா’ இதுதான் சார் அர்த்தம் என சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: வில்லனாக நடிக்கிற ஆளு… கருப்பா வேற இருக்கார்… ரஜினிகாந்துக்கு நோ சொன்ன தயாரிப்பாளர்…

அவர் சொன்னதில் ரஜினிக்கும் திருப்தி. சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். ஆனால், இதுபற்றி பல வருடங்கள் கழித்து ஊடகம் ஒன்றில் பேசிய சுந்தர் சி ‘அவருக்கு எதாவது பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்ததை அடித்துவிட்டேன். அந்த பாடலை படமாக்கும்போது நடன இயக்குனருக்கு வரிகள் புரியவில்லை. அப்போது ரஜினி சார் ‘வானம் பூமி, கடவுள் மனிதன்’ எல்லாம் ஒன்னுதான் என்பதுதான் அர்த்தம் என சொன்னார்.

அவரை சமாளிக்க நான் அப்படி சொன்னாலும் அதை அவர் முழுமையாக நம்பினார். அதனால்தான் அந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது’ என சொல்லி இருக்கிறார்

google news
Continue Reading

More in Cinema News

To Top