Connect with us

Cinema News

தனுஷ் முதல் ஷாலினி வரை!.. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை சேப்பாக்கத்தில் கொண்டாடிய பிரபலங்கள்!..

2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகல நிகழ்ச்சியுடன் தொடங்கின. ஏ.ஆர். ரஹ்மான் தனது மகனுடன் இணைந்து பல்லேலக்கா, நீ சிங்கம் தான் என தமிழ் பாடல்களுடன் சில இந்தி பாடல்களையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நடனமாடி தங்கள் நடிப்பில் ஏபரல் 8ம் தேதி வெளியாக உள்ள படே மியான் சோட்டே மியான் படத்தை புரமோட் செய்தனர். நடனமாடி முடித்த பின்னரும் அக்‌ஷய் குமார் முழு உற்சாகத்துடன் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடிய ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்தார்.

இதையும் படிங்க: இளையராஜா – பாரதிராஜா – கண்ணதாசன் கூட்டணி!… அரைமணி நேரத்தில் உருவான ஹிட் பாடல்!..

சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றாரே சினிமா பிரபலங்கள் அணிவகுத்து பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு தனுஷ், சிவகார்த்திகேயன், திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்கள் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்தனர்.

அதே போல நேற்று நடைபெற்ற ஐபிஎல் முதல் போட்டியை நடிகர் தனுஷ் தனது பாடிகார்டுகளுடன் வந்து பார்த்து ரசித்தார். தங்கை ஷாமிலியுடன் அஜித் மனைவி ஷாலினி ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்தார். நடிகர் ஜெயம் ரவி மனைவியுடன் சேப்பாக்கம் வந்து மேட்ச்சை பார்த்து ரசித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தல தோனியின் தீவிர ரசிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷும் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை சேப்பாக்கம் வந்து கண்டு ரசித்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்ப்படம் 3 ரெடியாகுது!.. அந்த பெரிய மாஸ் படத்தை வச்சு செய்யப் போறேன்.. மிர்ச்சி சிவா மிரட்டுறாரே!

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. 2008 ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சென்னை அணியை இன்னமும் பெங்களூர் அணி சேப்பாக்கத்தில் வீழ்த்த முடியவில்லை.

ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே வெற்றிவாகை சூடியுள்ளார். விராத் கோலி ஆரம்பத்திலேயே தோல்வியை தழுவி அப்செட் ஆகி விட்டார். தோனியின் பேட்டிங்கை ரசிகர்கள் ரசிக்க முடியவில்லை என்றாலும் மின்னல் வேக ஸ்டம்பிங் மற்றும் அவரது ஆலோசனைக்குப் பின்னர் விழுந்த விக்கெட்டுகளும் ரசிகர்களை ஹேப்பி ஆக்கின.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top