Cinema History
ஜெய்சங்கரிடம் எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி!.. அதுக்கு பின்னால் இருக்கும் ஸ்டோரி இதுதான்!..
இரவும், பகலும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் ஜெய்சங்கர். “தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட்” என பெயர் வாங்கும் அளவிற்கு அவரது நடிப்பு குறிப்பிடும் படியாக அமைந்தது. துப்பறியும் கதைகளில் அதிகமாக நடிக்கவே அவருக்கு இப்படி ஒரு புனைப்பெயர் கிடைத்தது.
இப்படி வளர்ச்சி பாதையில் போய்க்கொண்டிருந்த ஜெய்சங்கருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது பலருக்கும் தெரியாததாகவே இருந்தது. ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்தபோதே இருவருக்கும் இடையேயான நட்பு துவங்கியுள்ளது. இப்படி இருக்க ஒருநாள் படப்பிடிப்பில் இருந்த ஜெய்சங்கரை எம்.ஜி.ஆர் அழைக்க அவரும் நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இதையும் படிங்க: அந்த விஷயத்தில் எம்ஜிஆர் – சிவாஜிக்கே முன்னோடியாக இருந்த ஜெய்சங்கர்..!
அப்போது ‘நடிகை விஜய லட்சுமியை நீங்கள் திருமணம் செய்யப்போவதாக தகவல் வருகிறதே?’ என சந்தேகத்தோடு எம்.ஜி.ஆர் கேட்க, தான் விஜய லட்சுமியுடன் அதிகமான படங்களில் நடித்து வருவதால் இது போன்ற வதந்தி பரவிவருகிறது என ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். அதன்பின் திருமண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி அனுப்பியுள்ளார் எம்.ஜி.ஆர்.
பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்ற ஜெய்சங்கரின் திருமணத்திற்கு பணிச்சுமை காரணமாக பங்கேற்க முடியாமல் போனதால் அவரின் தங்கை திருமணத்தில் கலந்து கொண்டதோடு, பந்தியிலும் அமர்ந்து விருந்து சாப்பிட்டார் எம்.ஜி.ஆர். இது இருவருக்குமிடையே இருந்த நெருக்கத்தை எடுத்துரைக்கும் விதமாகவே பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: அசோகன் காதல் திருமணத்தில் இவ்வளவு பிரச்சினை இருந்ததா? எம்ஜிஆர், ஜெய்சங்கர் செய்த உதவி என்ன தெரியுமா?
ஒருமுறை எம்.ஜி.ஆரின் அரசியல் குறித்த கருத்து ஒன்றை வெளிப்படையாக ஜெய்சங்கர் கூற, ஆரம்பத்தில் இதனை நம்ப மறுத்த எம்.ஜி.ஆர், அது சில மாதங்களிலேயே நடந்தேறியதும் ‘நீங்கள் அன்று சொன்னது சரிதான், நான்தான் நீங்கள் சொன்னதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை’ என்று சொன்னார். அந்த நேரத்தில் எளிதாக கடந்து போக முடியாத ஒரு கசப்பான நிகழ்வு குறித்து பேசும் போதும் கூட புன்னகையோடே பேசியது எம்.ஜி.ஆரின் மன உறுதியின் வெளிப்பாடாக இருந்தாக ஜெயசங்கர் சொல்லியிருந்தார்.
இப்படி இருந்த இவர்களது நெருக்கம் ஒரு திருமண விழாவில் தான் பேசியதை எம்.ஜி.ஆர் தவறாக புரிந்து கொண்டதாகவும், இதனால் உறவில் சிறு விரிசல் ஏற்பட்டதாகவும், அது தன்னை மிகவும் பாதித்தாகவும் ஜெய்சங்கர் கூறியதாக பிரபல தயாரிப்பாளரும், சினிமா விமர்சகருமான “சித்ரா” லட்சுமணன் தெரிவித்திருந்தார்.