‘இனிமேல்’ ஆல்பத்தில் நடிச்சதுக்கு காரணமே இதுதான்!.. உண்மையை போட்டு உடைத்த லோகேஷ்!..

Published on: March 26, 2024
Shruthi, Logesh
---Advertisement---

கமலின் விக்ரம் படத்தை இயக்கியதில் இருந்து லோகேஷின் புகழ் உச்சிக்குச் சென்றுவிட்டார். படமும் அதிரி புதிரி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இனிமேல் ஆல்பத்தில் சுருதிஹாசனுடன் இணைந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படுக்கை அறை காட்சிகளிலும் நடித்து இருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது.

அதிலும் கமலின் தீவிர ரசிகர் அவர். அப்படிப்பட்டவர் அவரது மகளுடன் இது போல் நடிப்பதற்கு எப்படி ஒத்துக்கொண்டார் என்பது புரியாத புதிராகவே இருந்தது. இந்த புதிருக்கு விடை சொல்வது போல அவரது சமீபத்திய பேட்டி அமைந்துவிட்டது.

சுருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் நடித்த இனிமேல் ஆல்பம் பற்றி தான் இன்று மீடியா எங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த ஆல்பத்தில் சுருதிஹாசனுடன் புகுந்து விளையாடியிருப்பார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

என்ன இவரா இப்படி நடிக்கிறாருன்னு பார்க்குறவங்க எல்லாருக்குமே பயங்கர ஆச்சரியம். இது பற்றி அவர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

இதையும் படிங்க… வீட்ல இப்பவும் சிவாஜிராவ் தான்!.. ரகசியமா பண்ண வேலையை அம்பலப்படுத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!..

எனக்கு பயங்கரமா நடிக்கணும்கற இன்ட்ரஸ்ட்லாம் எதுவுமில்லை. முதல்ல சுருதிஹாசன் கூப்பிட்டு சொல்லும் போது எனக்கே ஆச்சரியமா இருந்தது. நான் எதுக்கு நடிக்கணும்? என்னை எதுக்குக் கூப்பிட்டுருக்காங்கன்னு.

அப்புறம் எனக்கு அவங்க கதை சொன்ன விதம், துவாரகேஷ் தான் டைரக்ட் பண்ணிருக்காரு, அவரும் அவர் டீமும் எல்லாம் பார்க்கும் போது சரி. ஏன் பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. எனக்கு பேசிக்காவே தெரியும் கமல் சாரை எவ்வளவு பிடிக்கும்னு என்கிறார். அதுமட்டுமல்லாமல் 9 வருஷமா கமலைப் பற்றித் தான் அதிகமாகப் பேசினாராம் லோகேஷ்.

inimel
inimel

அதுமட்டுமா சொன்னார். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் லோகேஷ் சொல்றாரு பாருங்க. இனிமேல் ஆல்பத்தை கமல் பாடியிருக்கிறார். அவரோட வாய்ஸ் பின்னாடி வரும்போது அதுல நான் நடிக்கறது சொல்ற மாதிரியான பெரிய விஷயமா எனக்கு நல்ல விஷயமாகப் பட்டுதுங்கறாரு லோகேஷ். ஆனாலும் லோகேஷூக்கு ரொம்ப தைரியம் தான்.