Cinema History
இரவு, பகலாக நடித்து 10 நாளில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம்!.. அசால்ட் செய்த எம்.ஜி.ஆர்!..
இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் உருவாக ஒரு வருடத்திற்கும் மேல் கூட ஆகிறது. கடந்த 5 வருடங்கள் கணக்கெடுத்தால் ரஜினிக்கு நான்கைந்து படங்களே வெளியாகியிருக்கிறது. கமலுக்கு விக்ரம் படம் மட்டுமே. விஜய்யோ ஒரு வருடத்திற்கு ஒரு படம், அஜித்தோ ஒரு வருட இடைவெளி விட்டுதான் அடுத்த படத்தை துவங்குகிறார்.
ஆனால், 60 முதல் 90 வரை அப்படி இல்லை. ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு என்பது அதிகபட்சம் 2 மாதங்களுக்குள் முடிந்துவிடும். சில இயக்குனர்கள் 25 நாட்களில் கூட படத்தை முடித்துவிடுவார்கள். அதனால்தான் ஒரே வருடத்தில் ரஜினி 20 படங்களில் நடித்தார். அவருக்கு போட்டியாக மோகன், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் 15 படங்களில் நடித்தார்கள்.
இதையும் படிங்க: ஜெய்சங்கரிடம் எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி!.. அதுக்கு பின்னால் இருக்கும் ஸ்டோரி இதுதான்!..
ஒரேநாளில் இரண்டு படங்களின் படப்பிடிப்பில் ரஜினி, விஜயகாந்த், மோகன் போன்ற நடிகர்கள் கலந்துகொள்வார்கள். ஆனால், படிப்படியாக நடிகர்கள் அப்படி நடிப்பது குறைந்து போனது. இப்போதெல்லாம் ஒரு புதுமுக நடிகர் நடிக்கும் படமே முடிவதற்கு 5 மாதங்கள் ஆகிவிடுகிறது. அதோடு, படங்களை தயாரிக்கும் பட்ஜெட்டும் அதிகரித்துவிட்டது.
இந்நிலையில், 10 நாளில் உருவான ஒரு எம்.ஜி.ஆர் படம் பற்றி தெரிந்து கொள்வோம். அப்போது பிரபலமாக இருந்த விஜய வாஹிணி ஸ்டுடியோ நிறுவனத்தில் தான் ஒரு படத்தில் நடிக்க விரும்புவதாக் நாகிரெட்டியிடம் எம்.ஜி.ஆர் சொல்ல வேலைகள் வேகமாக துவங்கியது. இந்த படத்திற்கு கதை எழுத கதாசிரியர் சொர்ணம் நியமிக்கப்பட்டார்.
தேர்தல் விரைவில் வரவிருந்த நேரம் அது என்பதால் அது தொடர்பாக கதை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. அப்போது அதேபோல் ஒரு தெலுங்கு படம் வெளியாகி ஹிட் அடித்திருந்தது. அதன் கதையை மட்டும் எடுத்துகொண்டு கதை, திரைக்கதையை எம்.ஜி.ஆருக்கு ஏற்றார் போல் மாற்றி காட்சிகளை அமைத்தார்கள்.
இதையும் படிங்க: அந்த எம்.ஜி.ஆர் படத்தில் பிடிக்காமல்தான் நடித்தேன்!. ஓப்பன் பேட்டி கொடுத்த ஜெயலலிதா!..
அப்படி உருவான திரைப்படம்தான் நம் நாடு. விஜயவாஹிணி ஸ்டுடியோவில் இருந்த 14 படப்பிடிப்பு தளத்திலும் இப்படத்திற்காக செட் போடப்பட்டது. காலை 9 மணிக்கு துவங்கும் படப்பிடிப்பு இரவு 2 மணி வரைக்கும் கூட நடந்தது. எனவே, அங்கேயே ஒரு அறையில் தங்கி நடித்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் அப்படி கொடுத்த ஒத்துழைப்பில் 10 நாட்களில் படம் முடிந்து போனது.
இத்தனைக்கும் அந்த படத்தில் எம்.ஜி.ஆரோடு ஜெயலலிதா, ரங்கராவ், தேங்காய் சீனிவாசன், நாகேஷ் இப்படி பல நடிகர், நடிகைகள் அதில் நடித்திருந்தனர். இவ்வளவு நட்சத்திர பட்டாளங்களை வைத்து 10 நாட்கள் அப்படி ஒரு பிரம்மாண்டமான ஒரு படத்தை உருவாக்க முடியுமா என்பது இப்போதுவரையில் ஆச்சர்யமான ஒன்றாகவே இருக்கிறது. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.