Cinema History
தமிழில் வெளிவந்த கல்ட் கிளாசிக் திரைப்படங்கள்!. காலம் கடந்து பேசப்படும் குணா!…
தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் படங்கள் என்று சொல்கிறார்கள். அடிக்கடி படங்களுக்கான விருது வழங்கும் விழாக்களில் சொல்லும் வார்த்தை. ஆனால் இதன் அர்த்தம் பலருக்கும் தெரியாது. என்னவென்று பார்ப்போமா…
கல்ட் கிளாசிக் என்றால் அந்தப் படங்கள் காலங்கள் கடந்தும் பேசப்படும் வகையில் இருக்கும். படம் ஒரு கலைப்படைப்பாக இருக்கும். அந்த வகையில் கமலின் பல படங்களைச் சொல்லலாம். நாயகன், சத்யா, குணா, அன்பே சிவம், ஆளவந்தான், மகாநதி, ஹேராம் படங்கள் சிறந்த உதாரணங்கள்.
பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் வைகைப்புயல் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி. ஷங்கர் தயாரிக்க, சிம்புதேவன் இயக்கிய முழுநீள காமெடி படம். கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படமும் அப்படிப்பட்டது தான். தனுஷ் நடித்த புதுப்பேட்டை படமும் ஒரு கல்ட் மூவி தான்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் வகையில் சினிமா மாறுபட்டு இருக்கும். அந்த மாநிலத்தின் கலாச்சாரத்தை சார்ந்து இருக்கும். ஒரு சில படங்கள் எல்லா தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். இவை தவிர சில படங்கள் ஆரம்பத்தில் ஒவ்வொருவராக படம் நல்லாருக்கு என்று சொல்லி சொல்லி நாளடைவில் சூப்பர்ஹிட்டாகும்.
ஆனால் இது கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறாது. ஆனால் காலம் காலமாகப் பேசப்படும். இது தோல்விப்படமாகவும் கூட இருக்கலாம். அதே நேரம் லேட் பிக்கப்னும் சொல்லலாம்.
10 வருடங்களாக இந்தப் படத்தை ஆடியன்ஸ் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் இருக்கும். இது தான் கல்ட் பிலிம்ஸ். அது போல தமிழில் சொல்ல வேண்டும் என்றால் ஆரண்ய காண்டம். இந்த வகைப்படத்தில் டைரக்ஷன், மேக்கிங் ஸ்கில்ஸ், கலை என்று ஏதாவது ஒன்று பிடித்து இருக்கலாம்.
இதையும் படிங்க… கோட் படத்தில் இடம்பெற இருக்கும் முக்கிய விஷயம்… அப்போ அந்த விஷயம் உண்மை தான் போலயே!
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் தமிழில் வெளியான கல்ட் மூவி குணாவின் பாதிப்பு. எவ்வளவு வரவேற்பைப் பெற்று வணிகரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்று பார்த்தீர்களா?