
Cinema News
20 முறை அஜீத்துடன் மோதிய சூர்யா படங்கள்… ஜெயித்தது யாரு? வாங்க பார்க்கலாம்…
Published on
அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் தமிழ்சினிமா உலகில் அழைக்கப்படுபவர் அஜீத். பைக் ரேஸில் ஆர்வம் உள்ளவர். இவரது சமகால நடிகர்களில் ஒருவர் சூர்யா. இருவரது படங்களும் மோதிக்கொண்டால் எப்படி இருக்கும்? அப்படி 20 முறை அஜீத்துடன் சூர்யாவின் படங்கள் மோதின. ஜெயித்தது யாருன்னு பார்க்கலாமா…
1998ல் அஜீத், கார்த்திக்குடன் இணைந்து நடித்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படமும், சூர்யா நடித்த சந்திப்போமா படமும் ரிலீஸ். இதுல அஜீத் படம் 250 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. அதனால் அவர் தான் வின்னர். அதே ஆண்டில் அஜீத் நடித்த ரெட்டை ஜடை வயசு படமும், சூர்யா நடித்த காதலே நிம்மதி படமும் ரிலீஸ். இந்த மோதலில் ரெண்டுமே பிளாப் ஆனது.
Vaali, Periyanna
1999ல் அஜீத் நடிப்பில் வாலி, சூர்யா நடிப்பில் பெரியண்ணா படங்கள் ரிலீஸ் ஆனத. இதுல அஜீத் ரெட்டை வேடத்தில் நடித்த வாலி 270 நாள்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. அதனால் அஜீத் தான் வின்னர். அதே ஆண்டில் அஜீத் நடித்த அமர்க்களம், நீ வருவாய் என படங்களும், சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படங்களும் மோதின. இதிலும் அஜீத் தான் வின்னர்.
2001ல் அஜீத் நடித்த தீனா, சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படங்கள் ரிலீஸ். தீனா படத்தில் இருந்து தான் அஜீத்துக்கு தல பேரே வந்தது. இந்த மோதல்ல ரெண்டுமே வெற்றி. 2002ல் அஜீத் நடித்த ராஜா, சூர்யா நடித்த ஸ்ரீ படங்கள் ரிலீஸ். ஆனா ரெண்டுமே பிளாப். 2002ல் அஜீத் நடித்த வில்லன், சூர்யா நடித்த மௌனம் பேசியதே. இதுல அஜீத் தான் வின்னர்.
2003ல் அஜீத் நடித்த ஆஞ்சநேயா, சூர்யா நடித்த பிதாமகன், இதுல சூர்யா, விக்ரம் நடித்த பிதாமகன் தான் வெற்றி. அதனால் சூர்யாவே வின்னர். 2004ல் அஜீத் நடித்த ஜனா, சூர்யா நடித்த பேரழகன், ஆயுத எழுத்து படங்கள் ரிலீஸ். இதுல கூனன் வேடத்தில் சூர்யா நடித்த பேரழகன் வெற்றி. ஆயுத எழுத்து படமும் வெற்றி. அதனால் சூர்யா தான் வின்னர்.
2005ல் வெளியான அஜீத் நடித்த ஜீ, சூர்யா நடித்த மாயாவி என ரெண்டு படங்களுமே பிளாப். அதே ஆண்டில் அஜீத் நடிப்பில் பரமசிவன், சூர்யா நடிப்பில் ஆறு ரிலீஸ் ஆனது. இதுல சூர்யா தான் வின்னர். 2006ல் அஜீத் நடிப்பில் வரலாறு, சூர்யா நடிப்பில் சில்லுன்னு ஒரு காதல். இதுல வரலாறு படம் 215 நாள்கள் ஓடியது. அதனால் அஜீத் தான் வின்னர்.
Billa, Vel
2007 அஜீத் ஸ்மார்ட் லுக்குடன் நடித்த பில்லா, சூர்யா நடித்த வேல் படங்கள் ரிலீஸ். இதுல பில்லா வெள்ளி விழா கண்டது. அஜீத் தான் வின்னர். 2008ல் அஜீத் நடித்த ஏகன், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படங்கள் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். 2011ல் அஜீத் நடித்த மங்காத்தா, சூர்யா நடித்த 7ம் அறிவு படங்கள் ரிலீஸ். இதுல அஜீத் படம் தான் வெற்றி. 2012 அஜீத் கேமியோ ரோலில் நடித்த படம் இங்கிலீஷ் விங்கிலீஷ், சூர்யா நடித்த மாற்றான் படமும் ரிலீஸ். இதுல ரெண்டும் பிளாப்.
2015ல் அஜீத் நடித்த வேதாளம், சூர்யா நடித்த பசங்க 2 படங்கள் ரிலீஸ். இதுல அஜீத் தான் வின்னர். 2019ல் அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை, சூர்யா நடித்த காப்பான் படங்கள் ரிலீஸ். இதுல அஜீத் தான் வின்னர். 2022ல் அஜீத் நடித்த வலிமை, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படங்கள் ரிலீஸ். இதுல ரெண்டும் வெற்றி. 1997ல் அஜீத் நடித்த பகைவன், சூர்யா நடித்த நேருக்கு நேர் படங்கள் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர்.
KPY Bala: சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர் கே பி ஒய் பாலா....
விமர்சகர்கள் வைத்த ஆப்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ்...
STR49: சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரின் அப்பா டி. ராஜேந்தர் இவரை சிறுவயதிலேயே சினிமாவில்...
கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி...
KPY Bala: கேபிஒய் பாலா குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் பத்திரிக்கையாளர் உமாபதி ஒரு பெரிய...