Cinema News
ஆர்.கே.செல்வமணி இயக்கிய டாப் 5 ஹிட் படங்கள்!.. மறக்க முடியாத கேப்டன் பிரபாகரன்…
புரட்சிகரமான கதைகளையும், புரட்சிகரமான கருத்துக்களையும் தனது படங்களில் மையமாக வைத்து நடித்து, மறைந்த பின்னாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அன்பிற்கு சொந்தக்காரராக இருப்பவர் விஜயகாந்த். இவரின் திரை வாழ்வில் திருப்புமுனை தந்த இயக்குனர்களாக பலரும் இருந்தார்கள். அதில் முக்கியமான இடத்தை பிடித்தவர் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி.
இவர்கள் இருவரும் இணைந்து இரண்டு படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்காக கொடுத்திருந்தனர். ஒரு சில படங்கள் பூஜைக்கு பிறகு நின்றும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளிவராமலும் போனது. “கேப்டன் பிரபாகரன்”, “புலன் விசாரணை” இவ்விரண்டும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. ரூபினி, காந்திமதி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளிவந்தது கேப்டன் பிரபாகரன்.
இதையும் படிங்க: 2 நாள் தூங்காம இரவு பகலா விஜயகாந்த் நடிச்ச படம்!.. இவ்வளவு கஷ்டப்பட்டாரா மனுஷன்!..
சந்தன கடத்தல் “வீரப்பனின்” கதையை மையமாக வைத்து இப்படம் உருவானது. ராணுவ வீரராக விஜயகாந்த் நடித்த “செந்தூரப்பூவே” படத்தில் கேப்டன் என்று அழைக்கப்பட்டவரை நிஜ வாழ்விலும் திரையிலும் கேப்டன் என்ற அடைமொழியோடு அழைக்க வைத்தது ஆர்.கே.செல்வமணியின் “கேப்டன் பிரபாகரன்”.
படத்தின் சன்டை காட்சிகளும், படமாக்கப்பட்ட விதமும், இசையும் படத்தை மெருகேற்றியது, சரத்குமார், விஜயகாந்தின் நண்பராக இதில் நடித்திருந்தார். பல சிறப்பு அம்சங்களை கொண்டு வாகை சூடிய இந்த படத்தை போலவே செல்வமணி, விஜயகாந்த் இணைந்த படம் “புலன் விசாரணை”. இதுதான் விஜயகாந்தை வைத்து செல்வமணி இயக்கிய முதல் படம். இளையராஜாவின் இசையமைப்பில் வந்த இந்த இரண்டு படங்களிலும் விஜயகாந்தை மையப்படுத்தியோ, அவருக்கென காதல் பாடல்களோ வைக்கப்படவில்லை என்பது விஜயகாந்த் படங்களில் பார்த்திராத ஒன்றாகும்.
இதையும் படிங்க: 20 வருடங்களில் யாருக்கும் கிடைக்காதது கமலுக்கு கிடைச்சது!.. இயக்குனர் சொல்றதைக் கேளுங்கப்பா!..
“புலன் விசாரணை” படத்திலேயும் ரூபினியே கதாநாயகி. பிரபல ரெளடியான ஆட்டோ சங்கரின் கதையை பின்னணியாக கொண்டு வெளிவந்த படம் இது. சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வில்லனாகவும், அடியாளாக ஆனந்தராஜும் நடித்திருந்தனர். வேறுலெவெல் ஆக்சன் படமாக அமைந்தது. இந்த படத்தின் சண்டை காட்சிகளும், பின்னணி இசையும் இந்த படத்தை கவனிக்க வைத்த அம்சங்களாக அமைந்தது.
இப்படி கேப்டனை வைத்து இரண்டு படங்களை மட்டுமே செல்வமணி இயக்கியிருந்தாலும் இரண்டும் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. இவைகளை தவிர “செம்பருத்தி”, மக்கள் ஆட்சி, அரசியல் போன்ற படங்கள் செல்வமணியின் வெற்றிப்பட வரிசையில் முக்கியமானவைகளாக அமைந்தது. செம்பருத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரோஜா, செல்வமணி படப்பிடிப்பின் போது காதலர்களானார்கள், அவர்களுக்கு இடையே மலர்ந்த காதலை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி பின்னர் மணம் முடித்து கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்.