Cinema History
இளையராஜாவின் 1000மாவது படத்திற்கு புதுப்பாடலாசிரியர்… ஏன்னு தெரியுமா?
இசைஞானி இளையராஜாவின் 1000வது படம் தாரை தப்பட்டை. இது கரகாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இசையும் முற்றிலும் வேறுபட்டது. இந்தப் படத்திற்கு புதிய பாடலாசிரியரை எழுத வைத்தது ஏன்? முதலில் ஒரு மெட்டு போடுகிறார் இளையராஜா. இந்த மெட்டுக்கு 4 பாடலாசிரியரை வைத்து எழுதுகிறார்கள். ஆனால் அது திருப்தியில்லை.
பாலாவுக்கும், இளையராஜாவுக்கும் அது ஒத்துப்போகவில்லை. உடனே ராஜா சார் வரிகளே இல்லாம சும்மா அவன் இவன்ல வச்ச மாதிரி, தன்னன்ன தானனன்ன தன்னானன்னா என ராகத்தை மட்டும் போட்டு விடுவோம் என்கிறார். உடனே பாலா கொஞ்சம் பொறுங்க. இன்னொரு பாடலாசிரியரை வச்சி எழுதிடலாம்னு சொல்றாரு. அப்போ பாலாவின் தயாரிப்பில் சண்டிவீரன் படத்தை சற்குணம் இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க… 17 முறை ரஜினியுடன் மோதிய சரத்குமார் படங்கள்… அதிக படங்களில் ஜெயித்தது யாருன்னு தெரியுமா?
அப்போ கிளைமாக்ஸ்ல ஒரு பாட்டு வருது. தாய்ப்பாலும், தண்ணீரும ஒண்ணா தான் இருந்துச்சான்னு அந்தப் பாடல் வருகிறது. இந்தப் பாட்டோட ரெக்கார்டிங் முடிந்ததும் பாலாவிடம் போட்டுக் காட்டுகிறார்கள். அவருக்கு கண்களில் நீர் வழிகிறது. இந்தப் பாடலாசிரியர் யார்னு கேட்டா மோகன்ராஜன்னு சொல்றாங்க. அவரை அழைத்துப் பாராட்டி, தாரை தப்பட்டையிலும் எழுத வைக்கிறார்.
இந்தப் பாடலுக்கு ஏற்கனவே 4 பேர் எழுதிட்டாங்க. செட்டாகல. நீங்க நல்லா எழுதுனா தான் வைக்க முடியும்னு சொல்லிடுறாரு. அதுமட்டுமல்லாம இந்தப் பாடல்ல கரகாட்டம் பற்றி எழுதக்கூடாது. உங்க மூடுக்கு ஏற்ற மாதிரி ஜாலியா எழுதுங்கன்னு சொல்றாரு.
அதுக்காக மெனக்கெட்டு பாடல் எழுதுறாரு. இந்தப் பாடல் ரெக்கார்டிங் போகுது. பாலா பாடலாசிரியர்கிட்ட ராஜா சார் ஓகே பண்ணிட்டாருன்னு சொல்றாரு. அது தான் வதன வதன வடி வடிவேலனே வசிய மருந்து வைக்க வா பாடல். செம ஜாலியான இசையைக் கொடுத்திருப்பார் இளையராஜா. பாடலில் குசலக்காரி என்ற வார்த்தையைப் போட்டு இருப்பார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவள் என்று அர்த்தம். பாடலின் வரிகளில் அடவு சொற்கள் ரொம்ப அழகாக இருக்கும்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.