Cinema History
பொய் சொல்லி வாய்ப்பு கேட்டு கெஞ்சிய சந்திரபாபு!.. எம்.ஜி.ஆரையே அசரவைத்த காமெடி நடிகர்…
திடீரென ஒரு நாள் எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு நுழைந்திருக்கிறார் சந்திரபாபு. அவரிடம் உங்களுக்கு ‘என்ன வேண்டும்?’ என எம்.ஜி.ஆர் கேட்க, படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என பதில் சொல்லியிருக்கிறார். அதற்கு ‘நான் என்ன சினிமா கம்பெனியா வைத்திருக்கிறேன்? நான் எப்படி உங்களுக்கு வாய்ப்பு தர முடியும்?. தேவைப்பட்டால் சொல்லி அனுப்புகிறேன்’ எனக்கூறியுள்ளார். மேலும் தங்களுக்குஎன்ன வெல்லாம் தெரியும் என எம்.ஜி.ஆர் கேட்க அங்கேயே நடித்துக்காட்டியிருக்கிறார் சந்திரபாபு.
அதன்பின் ஒருநாள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் பேசிகொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணன் ‘தமிழ் சினிமாவில் திறமை கொண்ட புதுமுகங்கள் வந்தால் அது ஆரோக்கியமாக இருக்கும்’ என சொல்லியிருக்கிறார். அப்பொழுது சமீபத்தில் ஒரு பையன் என்னை வந்து சந்தித்தான், அவன் மிகுந்த திறமைசாலி, அவன் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்திற்கு ஒருநாள் நிச்சயம் வருவான் என தனது வீட்டில் நடந்த நிகழ்வை சொல்லி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.
இதையும் படிங்க: நடிகையை சோதித்து பார்க்க சந்திரபாபு செய்த வேண்டாத வேலை.. நடந்த ட்விஸ்ட்தான் வேற
அந்த நேரம் பார்த்து சந்திரபாபு படப்பிடிப்பு தளத்திற்கு உள்ளே வர, ‘ நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள்?’ என எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். ‘நான் காவலாளியிட,ம் ஒரு பொய் சொல்லித்தான் உள்ளே வந்தேன். இன்று நான் “மருமகள்” படப்பிடிப்பில் இருப்பேன் என்னை வந்து சந்தியுங்கள் என நீங்கள் சொன்னாதாக ஒரு பொய்யை சொல்லித்தான் வந்தேன்’ என சந்திரபாபு சொல்லியிருக்கிறார்.
இதனை கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார் எம்.ஜி.ஆர். நிலைமையை புரிந்து கொண்ட என்.எஸ். கிருஷ்ணனோ ‘நல்லதுதான் ராமச்சந்திரனின் முகத்தை பார்த்து செல்வது நல்லதுதான்.. அவ்வளவு ராசியானவர்’ என்று கூறி எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்தியுள்ளார். கூடவே சந்திரபாபுவிற்கு வாய்ப்பு கொடுத்துத்தான் பாருங்கள் என சிபாரிசும் செய்துள்ளார். அப்படி கிடைத்த வாய்ப்புதான் குலேபகாவலி படம்.
இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு பாட்டா?!.. கடுப்பேத்திய சந்திரபாபு!. வேட்டிய மடிச்சி கட்டி நடனமாடிய எம்.எஸ்.வி!..
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையையும் படைத்தார் சந்திரபாபு. ஒருநாள் படத்தில் எம்.ஜி.ஆர். புலியுடன் சண்டை போடுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்பொழுது ஆக்ரோஷமாக எம்.ஜி.ஆரை பார்த்து பாய கனப்பொழுதில் எம்.ஜி.ஆர் குனிந்து தன்னை காப்பாற்றி கொள்ள அந்த இடத்தில் ஒரு விதமான பரபரப்பு நிலவியது.
எம்.ஜி.ஆரின் இந்த தைரியத்தை பார்த்து வியந்த சந்திரபாபு அவரது துணிச்சலை பாராட்டியிருக்கிறார். எம்.ஜி.ஆரை எப்பொழுதும் “மிஸ்டர் எம்.ஜி.ஆர்” எனவும், சந்திரபாபுவை “பாபு சார்’ என மாறி, மாறி அழைப்பதை இருவரும் வழக்கமாக கொண்டிருந்ததோடு நல்ல நண்பர்களாக சினிமாவையும் தாண்டி வலம் வந்திருக்கின்றனர்.