ஜோதிகா நடித்த படத்தை பார்த்து கண்கலங்கிய ரஜினி! அந்தப் படத்துக்கா இவ்ளோ எமோஷன்?

Published on: April 1, 2024
rajini
---Advertisement---

Rajini Jyothika: தமிழ் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் மூலம் மீண்டும் துவம்சம் செய்ய வந்திருக்கிறார் நடிகை ஜோதிகா. திருமணம், குழந்தைகள், குடும்பம் என திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு ப்ரேக் கொடுத்த ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதுவும் பெண்களை மையப்படுத்தி அமையும் கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் 36 வயதினிலே, காற்றின் மொழி, ராட்சசி போன்ற படங்களில் நடித்து பெண்களை கவர்ந்தார் ஜோதிகா. தற்போது தனது உடம்பை கட்டுக் கோப்பாக வைப்பதற்கு ஜிம்முக்கும் சென்று உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். ஆரம்பத்தில் எப்படிப் பார்த்தோமோ அதே மாதிரியான ஒரு தோற்றத்தில்தான் ஜோதிகா இருக்கிறார்,

இதையும் படிங்க: இந்திரஜா சங்கர் திருமண ரிசப்ஷன்!.. கமல்ஹாசன், ராமராஜன், சிவகார்த்திகேயன் என திரண்ட திரையுலகம்!..

தற்போது ஹிந்தியில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா ஒரு சில ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அதற்கேற்றாற்போல் மும்பையிலேயே தன் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். இவர் மட்டுமில்லாமல் சூர்யாவையும் ஹிந்தியில் ஹீரோவாக களமிறக்க காத்துக் கொண்டிருக்கிறார். படங்களை ஹிந்தியில் ப்ரடியூஸ் செய்யவும் ஆர்வமாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஜோதிகாவின் ஒரு படத்தை பார்த்து ரஜினி கண்கலங்கியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. ஜோதிகாவின் நடிப்பை மேலும் மெருகேற்றிய படமாக அமைந்தது ‘மொழி’ திரைப்படம். அந்த படத்தில் வாய் பேசாத காது கேட்காத ஒரு கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருப்பார்.

இதையும் படிங்க: இனிமே லாரன்ஸ் மகன் வந்து அதை செய்யப்போறான்!.. 20 வருஷத்துக்கு முன்னாடி போட்ட விதை.. இன்று மரமாக!..

இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என ரஜினி மொழி திரைப்பட இயக்குனரிடம் கேட்டாராம். படத்தை பார்த்துவிட்டு ரஜினி இயக்குனரிடம் ‘என்னப் படம் இது? சூப்பர் கதை. சூப்பர் சூப்பர்’ என கண்கலங்கி கூறினாராம். இப்படி ரஜினி உணர்ச்சிவசப்பட்டு பார்த்ததே இல்லை என மொழி திரைப்பட இயக்குனர் கூறினார். ஜோதிகாவும் ரஜினியும் சேர்ந்து சந்திரமுகி படத்தில் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.