Cinema News
பிரச்சனை வந்ததும் தனுஷ் என்னை கைவிட்டுட்டாரு!.. நான் கல்லடி வாங்கினேன்!. புலம்பும் செல்வராகவன்…
தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கிய கஸ்தூரி ராஜாவின் மகன்தான் செல்வராகவன். இவர் ஒரு பொறியல் பட்டதாரி. ஆனால், சினிமாவின் மீதே அதிக ஆர்வம். தனுஷை வைத்து ‘துள்ளுவதோ இளமை’ படத்தை இயக்கியவர் இவர்தான். அதுதான், தனுஷ், செல்வ ராகவன் என இருவருக்குமே முதல் படம். ஆனால், வியாபரம் கருதி டைட்டில் கார்டில் கஸ்தூரி ராஜாவின் பெயர் போடப்பட்டது.
அந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து மீண்டும் தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினர் செல்வராகவன். இந்த படத்தில்தான் சோனியா அகர்வால் அறிமுகமானார். செல்வராகன் எப்படிப்பட்ட இயக்குனர் என்பது இந்த படத்தில் எல்லோருக்கும் தெரிந்தது.
இதையும் படிங்க: அடங்கப்பா எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை.. ராயன் பற்றி வாய் திறந்த செல்வராகவன்…
மேலும், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன் என அடித்து ஆடினார். இயக்குனர் மணிரத்னமே செல்வராகவனை ‘ஸ்டன்னிங் டைரக்டர்’ என பட்டம் கொடுத்தார். ஆனால், அதன்பின் அவர் இயக்கிய படங்கள் பெரிதாக ஓடவில்லை. அதோடு அதிகநாட்கள் படப்பிடிப்பு நடத்தி பட்ஜெட்டை இழுத்துவிடுகிறார். அவர் இயக்கும் படங்கள் ஓடுவதில்லை என தயாரிப்பாளர்கள் புகார் சொன்னார்கள்.
அதேபோல் அவர் இயக்கிய இரண்டாம் உலகம், என்.ஜி.கே போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. அதோடு, சிம்பு, சந்தானம் ஆகியோரை வைத்து எடுத்த படங்களும் சில நாட்கள் படப்பிடிப்போடு நின்று போனது. எனவே, இப்போது சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். சாணி காயிதம், பீஸ்ட் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: கலர் கலரா பேனா வச்சிருந்தும் கதை வர மாட்டுதே!.. கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்த செல்வராகவன்!..
தம்பி தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய படம் மயக்கம் என்ன. இந்த படத்தில் ‘அடிடா அவள.. வெட்றா அவள.. உதடா அவள’.. என பாடல் வரிகள் வரும். அப்போது இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த பாடல் செல்வராகவன் எழுதியது என சொல்லி பலரும் அவரை திட்டினார்கள்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் இதுபற்றிய கேள்விக்கு பதில் சொன்ன செல்வராகவன் ‘அந்த வரிகளை எழுதியது தனுஷ்தான். பிரச்சனை வந்ததும் அவர் என்னை கைவிட்டு விட்டார். நான் கல்லடி வாங்கினேன்’ என ஜாலியாக சிரித்துகொண்டே சொன்னார். மேலும் ‘அது ஒரு நண்பனை ஆறுதல்படுத்த ஒருவன் பாடும் பாடல்தான். அதனால், அதில் தப்பு இருப்பதாக எங்களுக்கு தோன்றவில்லை’ என செல்வராகவன் கூறியிருந்தார்.