Connect with us
ramarajan fe

Cinema History

ரஜினிக்கு பயத்தை காட்டிய ராமராஜன்… ரகசியத்தை கசிய விட்ட கே.எஸ்.ரவிக்குமார்!..

“புரியாத புதிர்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். திரைக்கதை, வசனங்கள், இசை, பாடல்கள், நகைச்சுவை, சண்டை காட்சிகள் என ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இரண்டரை மணி நேரத்தில் சரியான அளவில் கொடுத்து திருப்திபடுத்தியவர்.

சிவாஜி, ரஜினி, கமல் போனற பிரம்மாண்டங்களோடு இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர். ரஜினியின் சூப்பர், டூப்பர் ஹிட் படமான “படையப்பா” படத்தின் இயக்குனர் இவரே. கமல்ஹாசனுடன் “தெனாலி”, ” பஞ்சதந்திரம்” என தொடர் வெற்றிகள்.

சரத்குமாருடன் இவர் இணைந்த பல படங்கள் இருவருக்கும் மிகப்பெரிய பெயரினை வாங்கிக்கொடுத்தது. இவரது படங்களில் பாடல்களும் மிக முக்கிய பங்கு வகிக்கும். “சேரன் பாண்டியன்” படம் இவர்கள் இருவரின் படங்களில் மிக, மிக முக்கியமான ஒன்று. அதிக நாட்கள் ஓடிய படங்களில் இதுவும் ஒன்றாகும்.

rk

rk

அசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிந்து, நடிகராகவும் இருந்து வந்தவர். ராமராஜனின் “ராஜா ராஜாதான்” படத்தில் உதவி இயக்குனராக ராமதாஸிடம் வேலை பார்த்து இருக்கிறார். ‘ஸ்டார்ட், கேமரா, ஆக்சன்” இதை ராமராஜனுக்குத்தான் முதன் முதலாக சொன்னதாக பெருமையுடன் சொல்லி இருந்தார். ராமராஜனை வைத்து படம் இயக்க வந்த வாய்ப்பு கைநழுவிப்போனதையும் வருத்தத்துடன் சொல்லியிருப்பார்.

raj

raj

ரஜினியும், ரவிக்குமாரும் ஒருமுறை சென்று கொண்டிருக்கையில் ஒரு திரையரங்கில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாம். ‘யார் நடித்த படம் இது?’ என ரஜினி கேட்க, ராமராஜன் படம் என ரவிக்குமார் சொல்லியிருக்கிறார். ரஜினியும் மிக பெரிய நட்சத்திரமாக வளர்ந்து வந்த தருணம் அது. அங்கிருந்த ரசிகர் கூட்டத்தை பார்த்து ரஜினி அசந்தும் போயிருக்கிறார்.

அதற்கு ரஜினியோ ‘இவர் படம் வந்தாலே எனக்கு பயமா இருக்கும் ரவி, என்னா ஓப்பனிங் , என்னா கலெக்ஷன், என்னா மக்கள் சப்போர்ட்டு’ன்னு பயத்தோட புகழ்ந்துதள்ளிய அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார். அப்படி மக்களின் அபிமானத்தை பெற்றவர் ராமராஜன் என்றும், நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் இப்போதும் அவருடன் இணைய தயார் என்றும் சொல்லியிருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top