ஆக்‌ஷனுக்கு ஹரினா அவருடைய மகன்? இந்த மாதிரி ஒரு படமா.. சைலண்டா இருந்து சாதிச்சிட்டாரே

Published on: April 2, 2024
hari
---Advertisement---

Director Hari: தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப அதன் சிந்தனையையும் மாற்றி வருகிறது. ஆரம்பகாலங்களில் ஒரே மாதிரியான போக்கில் சென்று கொண்டிருந்த சினிமா சமீபகாலமாக அதன் வளர்ச்சியை பார்க்க முடிகின்றது. எல்லாவிதமான கதைகளத்துடன் பல படங்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றன. ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு விதமான ஜானர் இருக்கும்,

அந்த வகையில் இயக்குனர் ஹரி ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை ஆக்‌ஷனை மட்டுமே நம்பி படங்களை கொடுத்து கொண்டு வருகிறார். அப்படி எடுத்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டான படங்களாகவே அமைந்திருக்கின்றன. ஆக்‌ஷன் சார்ந்த படங்கள் பல வந்தாலும் இது ஹரியின் படம்தான் என பார்த்ததுமே சொல்லிவிடலாம். அந்தளவுக்கு சண்டைக்காட்சிகளில் துவம்சம் செய்திருப்பார்.

இதையும் படிங்க: ரசிகர்கள் முட்டாளா? புரோமோஷனில் இறங்கினாலும் உங்க கெத்த விடமாட்றீங்களே அஜித் சார்…

2002 ஆம் ஆண்டு வெளியான தமிழ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஹரி முதல் படத்திலேயே தான் யார் என்பதை காட்டியிருப்பார். இந்தப் படத்திற்கு பிறகு சாமி, அருள், கோவில், ஆறு என தொடர்ந்து கமெர்ஷியல் படங்களை கொடுத்து ரசிகர்களை கூஸ் பம்பில் வைத்தார். ஹரியின் படங்கள் என்றாலே எனர்ஜிதான் என்று சொல்லுமளவிற்கு விறுவிறுப்பாக இருந்தது.

ஹரியின் கெரியரிலேயே மிகவும் முக்கிய படமாக அமைந்தது சாமி. விக்ரமுக்கும் திருப்பு முனையாக அமைந்தது. அதே போல் சிங்கம் படம் யாரும் எதிர்பாராத ஒரு வெற்றியை பதிவு செய்தது. அந்தப் படத்தின் வெற்றி அடுத்து அடுத்து சிங்கம் 2 , சிங்கம் 3 என வரிசையாக அதன் சீக்யூலை எடுத்தார்.

இதையும் படிங்க: எந்த தைரியத்துல வந்த? ரஜினியை தேடி வந்தது குத்தமா? பாலசந்தர் கேட்ட கேள்வியால் ஆடிப்போன இயக்குனர்

இப்படி ஆக்‌ஷனில் அதிரடி காட்டும் ஹரிக்கு ஸ்ரீராம் ஹரி என்ற மகன் இருக்கிறார். அவர் தற்போது ஒரு ஷார்ட் ஃபிலிமை எடுத்து யுடியுப்பில் வெளியிட்டிருக்கிறார். சரியாக ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் அந்தப் படத்திற்கு ஹம் என்று பெயர் வைத்திருக்கிறார். பைலட் ஃபிலிமை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஸ்ரீராம் ஹரியுடன் அவருடைய சித்தியும் நடிகையுமான ஸ்ரீதேவி விஜயகுமார் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.