Cinema History
கங்கை அமரனை யாருன்னே தெரியாதுன்னு சொன்ன கனகா… நடந்தது என்ன?..
கரகாட்டக்காரன் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க காரணம் இளையராஜாவின் இசை, காமெடி, பாடல்கள் இவற்றுடன் இன்னொரு முக்கியமான விஷயம் ராமராஜன் கனகா ஜோடி. அவ்வளவு அற்புதமாக இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒத்துப் போனது. படத்தின் இயக்குனர் கங்கை அமரன்.
பாடலாசிரியர், இசை அமைப்பாளர், இயக்குனர் என பல தளங்களில் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் கங்கை அமரன். கரகாட்டக்காரன் படத்தில் கனகா நடிக்க வந்தது எப்படி? அவர் தன்னை யாருன்னே தெரியல என்றது ஏன்? என்று கங்கை அமரன் சொல்கிறார்.
எங்க வீட்டுக்குப் பக்கத்துத் தெரு. பானுப்பிரியாவைப் பார்த்தும் படத்துல கதாநாயகியாக்க மனசு வரல. அது ஒரு பிளஸ் தான். தேவிகா பொண்ணு கனகாவைப் பார்த்ததும் வீட்டில் காபி எல்லாம் சாப்பிட்டாங்க. என்னோட வைஃப் சொன்னதும் அந்தப் படத்துக்கு கனகாவையே கதாநாயகியாக்கினேன்.
கனகாவை ஒருமுறை சன் சிங்கர் நிகழ்ச்சிக்காக கூப்பிடப் போயிருந்தேன். குண்டா ஒரு பொண்ணு வந்தாங்க. கனகாவை வரச் சொன்னா நீங்க வந்திருக்கீங்க யாருன்னு கேட்டேன். நான் தான் கனகான்னு சொன்னாள். சொத்துப்பிரச்சனையின் போது கனகாவை சந்திக்க அவரின் வீட்டுக்கு போனேன். அப்போது கதவைப் பூட்டிக் கொண்டு திறக்கவே இல்லையாம். நான் தான் கங்கை அமரன்னு சொன்னேன். இங்கு அதெல்லாம் கிடையாது.
கங்கை அமரன்லாம் யாருன்னு தெரியாது. அதுக்கு அப்புறம் பாட்டெல்லாம் பாடி அனுப்பினேன். குடகுமலைக் காற்று, மாங்குயிலே என பாடல்களை எல்லாம் பாடிக்காட்டியும் பதில் வரவே இல்லை. போனைக் கட் பண்ணி விட்டாள். எனக்கு வேண்டிய பொண்ணு. நம்ம வீட்டுலயே இருக்கலாம்னு கூட அழைச்சிட்டுப் போகலாம்னு நினைச்சேன். ஆனா எதுவுமே நடக்கல என்கிறார் கங்கை அமரன்.
இதையும் படிங்க… முதல் சந்திப்பில் ராமராஜன் கேட்ட கேள்வி!. ஆடிப்போன திண்டுக்கல் லியோனி!.. நடந்தது இதுதான்!..
அவரது தந்தை சொத்தை எல்லாம் அபகரிக்கப் பார்த்தார் என்றும் தந்தைக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே கனகா இருந்தார் என்றும் சொல்கிறார் கங்கை அமரன். அது மட்டுமல்லாமல் சொந்தப் பிரச்சனையில் எல்லாம் நாம் தலையிட முடியாது என்றும் ஆனா ரொம்ப நல்ல பொண்ணு என்றும் கங்கை அமரன் சொல்கிறார்.