Cinema News
அஜித் வச்ச கடைசிக்கெடு!.. பதறிப்போன விடாமுயற்சி படக்குழு!.. இதுக்கு இல்லயா சார் ஒரு எண்டு!..
இப்போதெல்லாம் அஜித் நடிக்கும் படங்கள் என்றாலே படம் துவங்கியதில் இருந்தே ஒரு பஞ்சாயத்துதான். இதனால் படம் முடியவே ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிடுகிறது. திட்டமிட்டபடி அவரின் படங்கள் முடிந்து வெளியாவதே இல்லை. பல சிக்கல்களை படக்குழு சந்திக்க வேண்டியிருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம் கூட அப்படித்தான். அப்படத்தின் ஒரு அப்டேட்டை கூட 2 வருடங்களாக விடாமல் இருந்தது படக்குழு. இதனால் கிரிக்கெட் ஸ்டேடியம், அரசியல்வாதிகளின் பிரச்சாரம் என எல்லா இடத்தில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டார்கள் அஜித் ரசிகர்கள்.
இதையும் படிங்க: விஜயகாந்தை வைத்து பல ஹிட்களை கொடுத்த சுந்தராஜன்! இவங்களுக்குள்ள இப்படி ஒரு பிரச்சினையா
படம் வெளியானபின் அப்படம் ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் அதே ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார் அஜித். அந்த படம் ரசிகர்களுக்கு பிடித்து ஹிட் அடித்தது. அப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்கள் கழித்துதான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இதற்கிடையில் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிப்பதாக இருந்து அதிலிருந்து அஜித் விலகினார்.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் துவங்கியது. 3 மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது. அதிலும், சில நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பனி மழை, புயல் காற்று, லைக்காவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி என பல காரணங்கள் சொல்லப்பட்டது. படப்பிடிப்பு நின்று போனதும் அஜித் வழக்கம்போல் பைக்கை எடுத்துகொண்டு எங்கோ போய்விட்டார்.
இதையும் படிங்க: கார்த்திக்கை வச்சு படம் எடுக்கிறது கஷ்டம்… சுந்தர் சி மட்டும் எப்படி அவ்ளோ படம் எடுத்தாரு தெரியுமா?
அதோடு, ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் இயக்கத்திலும் அடுத்து நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை தெலுங்கில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஆனால், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை.
இதில் கடுப்பான அஜித் ஏப்ரல், மே இரண்டு மாதங்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்து விடுங்கள். ஜுன் மாதத்திலிருந்து ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு போய்விடுவேன். அப்போது என்னை கூப்பிட்டால் வரமாட்டேன். அந்த படத்தை முடித்துவிட்டுதான் விடாமுயற்சி படத்திற்கு வருவேன் என சொல்லிவிட்டாராம். இதில் அலறிப்போன தயாரிப்பு நிறுவனம் இந்த மாதம் 10ம் தேதி மீண்டும் படப்பிடிப்பை துவங்கும் வேலையில் இறங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.