Cinema History
ஹீரோக்களை நம்பாத இயக்குனர்கள் இங்கதான் இருக்காங்க!.. சும்மா பேசாதீங்க!.. சீறும் லிங்குசாமி!…
இயக்குனர் லிங்குசாமிக்கு பையா படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. இப்போது அந்தப் படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி ரீரிலீஸ் ஆக உள்ளதால் அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. சினிமா சார்ந்த சில கேள்விகளுக்கு இப்படி பதில் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் சொல்றது தான் கதை. அவருக்கிட்ட எல்லாம் யாரும் மாற்ற முடியாது. ஹீரோவுக்காக படம் பண்றாரு. அவரு விரும்பி செய்றாரு. வெற்றிமாறன் ஹீரோவுக்காக கதை பண்ணல. சூரியை வச்சித்தான் படம் பண்ணிருக்காரு. கார்த்திக் சுப்புராஜ் படத்துல லாரன்ஸ் மாஸ்டர் கடைசில சுட்டுக் கொல்லப்படுறாரு. ஆனா அவரு சொல்றதைத் தானே லாரன்ஸ்சும் கேட்குறாரு. அவரு நினைச்சா 100 பேரை நான் அடிப்பேன்னு சொல்லிருக்கலாம் இல்லையா. அந்த மாதிரி புதுமையான படத்தை அவர் தானே எடுத்துருக்காரு.
இதையும் படிங்க… சிவாஜியின் நடிப்பு இப்படித்தான் இருக்கும்!.. இளம் நடிகர்கள் சொல்வது என்ன தெரியுமா?…
தைரியமான இயக்குனர் இப்பவே நம்ம காலகட்டத்துல கண்ணுக்கு முன்னாடி தான் இருக்கிறார்களே. வெற்றிமாறன் இந்தியா முழுவதும் தேடிக்கிட்டு இருக்குற டைரக்டர். எந்தக்காலக் கட்டத்திலும் சரியான ஒரு ஆளை எந்த ஹீரோவும் குழப்ப முடியாது. அவங்க திடமா இருந்தாங்கன்னா கதையில ஸ்ட்ராங்கா இருந்தாங்கன்னா… எல்லா காலகட்டத்திலயும் சரியான டைரக்டர்ஸ் இருந்துக்கிட்டே இருக்காங்க.
அறம் படத்துல கூட குழியில விழுந்து காப்பாற்றுனது நம்ம ஆளுங்க தானே. இதற்கு ஏன் நாம மலையாளப் படத்தை பெரிசுன்னு சொல்லணும். இங்க அங்கன்னு நான் சினிமாவை பிரிச்சுப் பார்க்கல. நல்ல படம். சரியான படம், சரியில்லாத படம் அவ்வளவு தான். தமிழ்ல இருக்குற டெக்னீஷியன்கள் எல்லாரும் இந்தியா முழுவதுக்கும் நம்ம தான் முன்னோடியா இருக்குறோம். ஒரு கால கட்டத்துல மலையாள சினிமாவையே நம்ம சினிமா மாற்றி விட்டது. இங்கே பண்ற மாதிரியே அங்கேயும் எடிட்டிங், கமர்ஷியல் சினிமா எல்லாம் வந்துவிட்டது.
அதனால அவங்க மேல, இவங்க கீழேன்னு ஒண்ணுமே கிடையாது. ஒரு காலகட்டத்துல அப்படி ஒரு டிரெண்டிங் இருந்த மாதிரி இருக்கும். லோகேஷோட கைதி, விக்ரம் எல்லாம் நல்ல படம். நெல்சன், அட்லின்னு எல்லாம் நல்ல டைரக்டர்ஸ் இருக்காங்க. வெற்றிமாறன் கூட எல்லாம் படம் பண்ணனும்னு இந்தியா முழுவதும் நிறைய நடிகர்கள் தயாராகத் தான் இருக்காங்க. அதனால நம்மள நாமே குறை சொல்லக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.