Cinema History
வடிவேலுக்கு நன்றின்னு ஒன்னு இருந்திருந்தா அதை செய்திருக்கணும்!.. போட்டு பொளக்கும் பிரபலம்!..
கலைஞர் நூற்றாண்டு விழாவில் வடிவேலு ராஜ்கிரணை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதாராம். இருவரும் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்களாம். இதெல்லாம் வெறும் நடிப்பு தான் என்கிறார் வலைப்பேச்சு அந்தனன். மேலும் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…
வடிவேலு ராஜ்கிரணைக் கட்டிப்பிடித்து அழுதது எல்லாம் வெறும் நடிப்பாகத் தான் பார்க்க முடிகிறது. 15 வருஷத்துக்கு முன்னால தினமும் 10 லட்சம் சம்பளம் வாங்கினாராம் வடிவேலு. அவ்ளோ பெரிய இடத்துல இருந்தாரு. கோடி கோடியா சம்பாதிச்சாரு. அவரை அறிமுகப்படுத்திய இடத்தில் ராஜ்கிரண் இருக்காரு. அவருக்கு வடிவேலு என்ன பண்ணினாரு? ராஜ்கிரண் பொருளாதாரத்திலும் பெரிய இடத்தில் இல்லை.
இதையும் படிங்க… கண்ணதாசனுக்கு வந்த காதல்!.. பாடல் வரிகளில் இறக்கிய கவிஞர்!.. அட அந்தப் பாடலா?..
அவர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போது ‘ஐயா நீங்க தான் என்னை அறிமுகப்படுத்தினீங்க. நான் உங்களுக்கு இம்சை அரசன் மாதிரி ஒரு படம் பண்ணித் தாரேன்னு’ சொல்லிருக்கலாம். அப்படி செய்திருந்தார்னா ராஜ்கிரண் ஓரளவுக்கு கடனில் இருந்து மீண்டு இருக்கலாம். அன்னைக்குலாம் உதவாம இன்னைக்கு மார்க்கெட் டவுனாகி இருக்குற சமயத்தில அவரு கட்டிப்புடிச்சி அழுதா என்ன? அழாம இருந்தாதான் என்ன?
கலைஞர் நூற்றாண்டு விழாவில் வடிவேலு ராஜ்கிரணைப் பார்த்ததும் அழுதார். உடனே ராஜ்கிரணும் எழுந்து கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம். அப்போது வடிவேலுவின் இடம் இன்னொரு வரிசையில் இருந்தாம்.
அதன்பிறகு நம் மேல இவ்ளோ பாசமா இருக்கானேன்னு ஒரு சேரை எடுத்துப் போட்டு பக்கத்துல உட்கார வைச்சாராம் ராஜ்கிரண். வடிவேலு பணத்தை மூட்டை மூட்டையா அடுக்கி வச்சிருக்காரு. அதை வேணா கொடுக்கலாம். அதை ராஜ்கிரணும் விரும்ப மாட்டார். வடிவேலு டாப்ல இருந்தாருன்னா ஒருவேளை இந்தக் கண்ணீரும், அன்பும் நான் உங்களுக்கு ப்ரீயா நடிச்சித் தாரேன்னு அவர் சொல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனா இன்னைக்கு எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
என் ராசாவின் மனசிலே படத்தை தயாரித்து இயக்கியவர் ராஜ்கிரண். இவர் இந்தப் படத்தில் வடிவேலுவை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.