பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானா அவர்? ரஜினியை தாழ்த்தி பேசக் காரணம் என்ன?

Published on: April 4, 2024
rama
---Advertisement---

Super Star Rajinikanth: சமீபத்தில் நடிகர் ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. நீண்ட வருடத்திற்கு பிறகு ராமராஜன் நடித்து வெளியாகும் தமிழ் திரைப்படம்தான் இந்த சாமானியன் படம். அதுவும் ஹீரோவாகவே நடித்திருக்கிறார். அதன் டிரெய்லர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். ராமராஜனுக்காக பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பிரபல இயக்குனர் ஆர்.வி. உதயகுமாரும் கலந்து கொண்டு மேடையில் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அப்போது ஆர்.வி. உதயகுமார் ஒரு வினியோகஸ்தராக ரஜினி படத்தால் பெரும் நஷ்டத்தை அடைந்தேன் என்றும் ராமராஜன் படத்தால் பெரும் லாபத்தை அடைந்தேன் என்றும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் பிரச்னை முடிஞ்சுது… லேடி சூப்பர்ஸ்டார் சண்டை ஸ்டார்ட்… நயனுக்கே டஃப் கொடுக்கும் நடிகை…

ஆனால் முற்றிலும் பொய் என்பது போல் சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார். அதாவது ரஜினியின் தர்மத்தின் தலைவன் படத்தை ஆர்.வி.உதயகுமார்தான் வினியோகம் செய்தாராம். ஆனால் அவர் சொன்னதை போல் எல்லாம் நஷ்டம் அடையவில்லையாம். இவர் அந்தப் படத்தை வாங்கியதே 9 லட்சத்திற்குத்தானாம். அப்படி இருக்கையில் எப்படி 4.50 கோடி நஷ்டம் ஏற்படும் என சித்ரா லட்சுமணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அந்த காலத்தில் பெரும் பொருட்செலவு செய்து படத்தை எல்லாம் எடுக்கமாட்டார்கள். அதனால் ஆர்.வி. உதயகுமார் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தகவலைத்தான் கூறியிருக்கிறார் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: கண்ணதாசனுக்கு வந்த காதல்!.. பாடல் வரிகளில் இறக்கிய கவிஞர்!.. அட அந்தப் பாடலா?..

மேலும் கரகாட்டக்காரன் படம் தனக்கு ஒரு கோடி லாபத்தை பெற்றுத்தந்தது என கூறியிருந்தார். அதுவும் பொய்யான தகவல்தான். ஏனெனில் ஒரே ஏரியாவில் அந்த படம் 1 கோடி வரை லாபம் அடையவில்லை. ஆனால் பெரும் வசூலை பெற்ற படமாகத்தான் கரகாட்டக்காரன் திரைப்படம் அமைந்தது என சித்ரா லட்சுமணன் கூறினார். மேலும் ஒருவரை உயர்த்தி பேச மற்றொருவரை ஏன் தாழ்த்தி பேச வேண்டும்? ஏன் ஆர்.வி . உதயகுமார் அப்படி நடந்து கொண்டார் என எனக்கு தெரியவில்லை என்றும் சித்ரா லட்சுமணன் வருத்தத்துடன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.