25 வருஷமாக இதுக்கு தான் உழைச்சேன்… குடும்பமே கதறியது இதுக்கு தான்… நெகட்டிவ் டு பாசிட்டிவ் விஜே அர்ச்சனா…

Published on: April 4, 2024
---Advertisement---

Archana: சன்டிவியில் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் விஜே அர்ச்சனா. முதலில் அவருக்கு பெரிய அளவில் பாசிட்டிவ்வான புகழை சமூக வலைதளத்தில் இருந்த நிலையில் பிக் பாஸ் அதை மொத்தமாக மாற்றியது.  அவர் குடும்பமே நிறைய ட்ரோல்களை சந்தித்த நிலையில் தற்போது மீண்டும்  வைரல் ஆகியுள்ளனர்.

சன் டிவி காமெடி டைம் நிகழ்ச்சியில் வந்து புகழ்பெற்றவர் விஜே அர்ச்சனா. ஓரளவு ரசிகர்களை கொண்ட அர்ச்சனாவின் புகழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியால் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. நிறைய வேலை செஞ்சாச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணுமே என்ற மனநிலையில் பிக் பாஸ்க்குள் நுழைந்தார் அர்ச்சனா. பிரச்சினைகளுக்கு பெயர் போன பிக் பாஸ் அவருக்கு பூமர் ஆண்டி என்ற பட்டத்தையே வாங்கி கொடுத்தது.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் பிரச்னை முடிஞ்சுது… லேடி சூப்பர்ஸ்டார் சண்டை ஸ்டார்ட்… நயனுக்கே டஃப் கொடுக்கும் நடிகை…

அன்புனே சொல்லிக்கிட்டு இருக்கீங்க இதெல்லாம் ரொம்ப வம்பால இருக்கு என பலரும் அர்ச்சனாவே கலாய்த்தனர். அவர் மட்டுமல்லாது அவரின் மகள் சாரா, தங்கை அனிதா என பலரும் ரசிகர்களால்  மோசமாக விமர்சிக்கப்பட்டனர். 45 நாள்கள் தாண்டிய நிலையில் பிக் பாஸிலிருந்து ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார் அர்ச்சனா.

நானே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறனும் என்ற மனநிலைக்கு வந்து விட்டேன் என கமலிடம் தைரியமாக சொல்லிவிட்டு  வந்தார் அர்ச்சனா. திடீர் ஆபரேஷன், வீட்டின் பாத்ரூம் டூர் என தொடர்ச்சியாக அர்ச்சனா குறித்து வந்த எல்லா தகவலுமே அவருக்கு எதிராகவே அமைந்தது. ஆனால் திடீரென தன்னுடைய கணவருடன் விவாகரத்து செய்ய இருப்பதாக அவர் ஒரு பேட்டியில் ஓபனாக சொன்னதும் ரசிகர்கள் பலர் அதிர்ந்தனர்.

இதையும் படிங்க: கண்ணதாசனுக்கு வந்த காதல்!.. பாடல் வரிகளில் இறக்கிய கவிஞர்!.. அட அந்தப் பாடலா?..

அது குறித்து அர்ச்சனா பேசும்போது,  20 வருஷம் ஆகியாச்சு கணவர் ஒரு மூலையில நான் ஒரு மூலையில தான் இருக்கோம். இது என்னடா வாழ்க்கைனு நெனச்சு டைவர்ஸ் வரைக்கும் போயிட்டேன். என் மகள் தான் எனக்கு ஆறுதலா இருந்தா. அப்புறம் தான் என் கணவர் கால் செய்து தனக்கு விசாகப்பட்டினத்துக்கு மாற்றல் ஆகி இருப்பதாக சொன்னார்.

அதன்பின்னரே அந்த டைவர்ஸ் பேச்சை விட்டோம் எனக் கூறியிருப்பார். ஆடி, பிஎம்டபிள்யூ என பலரக கார்களை வைத்திருக்கும் அர்ச்சனா திடீரென புதிதாக ஒரு காரை வாங்கி இருக்கிறார். ஷோரூமில் காரை எடுக்கும் போது குடும்பத்தினர் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டனர். இந்த வீடியோ இணையதளத்தில் பெரிய அளவில் வைரலானது.

இது குறித்து விசாரிக்கும் போது அர்ச்சனாவின் தந்தையின் ஆசையாக தான் இந்த பென்ஸ் காரை வாங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இதற்காகவே அவர் தன்னுடைய 20 வருட கனவு எனவும் அந்த காரை குறிப்பிட்டு இருக்கிறார் என ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருவதை பார்க்க முடிகிறது.

இதையும் படிங்க:  பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானா அவர்? ரஜினியை தாழ்த்தி பேசக் காரணம் என்ன?

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.