Cinema History
எனக்கு சம்பளமே வேணாம்.. ஆனால் அந்த படத்துல நான் நடிக்கனும்! தங்கவேலு கெஞ்சி கேட்ட அந்த திரைப்படம்
Actor K.A. Thangavelu: தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்களை நாம் கடந்துவந்திருக்கிறோம். ஆனால் தங்கவேலு என்ற ஒரு மகத்தான நடிகரை எக்காலத்துக்கும் மறக்க இயலாது. தனது எதார்த்தமான நகைச்சுவையால் மக்களை சிரிக்கவைக்கவும் சிந்திக்க வைக்கவும் செய்தவர் தங்கவேலு. கிட்டத்தட்ட எம்ஜிஆரும் இவரும் ஒன்றாக சினிமாவில் நுழைந்தார்கள்.
எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களில் தங்கவேலுவை நாம் பார்க்க முடியும். நாடக மேடையில் இருந்து வெள்ளித்திரையில் தனது வெற்றிக்கொடியை நாட்டினார் தங்கவேலு.எம்ஜிஆரை ராமச்சந்திரா என்று அழைக்கும் சில பேரில் தங்கவேலுவும் ஒருவர். அந்தளவுக்கு இருவருக்கும் மிக அதிகளவு நெருக்கம் இருந்தது.
இதையும் படிங்க: அதுலதான் அவர் வாழ்க்கையே இருக்கு! செல்ஃப் எடுக்காம தத்தளிக்கும் சார்பட்டா 2.. அப்போ அவ்ளோதானா
நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர். சுந்தரம் எடுக்கும் பெரும்பாலான படங்களில் தங்கவேலுவை பார்க்க முடியும். ஏனெனில் டி.ஆர்.சுந்தரத்திற்கு தங்கவேலுவை மிகவும் பிடிக்குமாம். அதன் காரணமாகத்தான் தான் எடுக்கும் அனைத்து படங்களிலும் நடிக்க கூடிய வாய்ப்பை தங்க வேலுவுக்கு கொடுத்தார் டி.ஆர். சுந்தரம்.
அந்த நேரத்தில்தான் அலிபாபுவும் நாற்பது திருடர்களும் என்ற படத்தை ஆரம்பித்தார் டி.ஆர். சுந்தரம். தமிழில் உருவான முதல் வண்ணத்திரைப்படம் இது. டி.ஆர். சுந்தரம் எடுக்கும் படங்களில் தங்கவேலு இருந்தார் என்றால் அதற்கேற்ற் வகையில் சரியான கதாபாத்திரம் எல்லா படங்களிலும் அமைந்திருந்தது.
இதையும் படிங்க: கண்ணாடி போல சேலை!.. கண்ட அழகையும் காட்டி இழுக்கும் ஸ்ருதிஹாசன்!..
ஆனால் அலிபாபுவும் நாற்பது திருடர்களும் படத்தில் தங்கவேலுவுக்கு சரியான கதாபாத்திரம் அமையவில்லை. அதனால் முதலில் தங்க வேலு இந்தப் படத்தில் இல்லை. ஆனால் தங்கவேலுவுக்கோ தமிழில் உருவாகும் முதல் வண்ணத்திரைப்படம் என்பதால் எப்படியாவது இதில் நாம் நடித்துவிட வேண்டும் என எண்ணினார். அதனால் சுந்தரத்திடம் எனக்கு சம்பளமே வேண்டாம் . சிறு கதாபாத்திரம் ஆனாலும் போதும் .இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
அதன் பிறகே தங்கவேலு இந்தப் படத்திற்குள் நுழைந்திருக்கிறார். அவர் வந்த பிறகு தங்கவேலுவின் கதாபாத்திரத்தை பெரிய அளவில் கொண்டு சென்றார் சுந்தரம். அவருக்கென ஒரு பாடலை வைத்தார். அவருடைய கேரக்டரும் இந்தப் படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
இதையும் படிங்க: 33 முறை விஜயகாந்துடன் மோதிய பிரபு படங்கள்!.. அதிகமுறை ஜெயித்தது இளைய திலகமா? புரட்சிக்கலைஞரா?..