Connect with us

Cinema News

யுவன் இசையில் கவினின் வின்டேஜ் லவ் சாங்!.. கபிலன் வரிகள் நம்மை எங்கேயோ கொண்டு போகுதே!..

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்து பிரபலமான கவின் நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். அந்த படம் சரியாக ஓடாத நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு வந்த கவினுக்கு லாஸ்லியாவுடன் காதல் ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லவ் பிரேக்கப் ஆனாலும், லைஃப் நல்லாவே ஸ்டார்ட் ஆகி விட்டது.

பேய் படமாக கவின் நடித்த லிப்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், கடந்த ஆண்டு வெளியான டாடா திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக கவினுக்கு மாறியது.

இதையும் படிங்க: நாங்களும் இந்தியாவுலதான் இருக்கோம்!.. மார்லன் பிராண்டோவையே மடக்கிய நடிகர் திலகம்!…

பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் படம் விரைவில் வெளியாக போகிறது. அந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. பியார் பிரேமா காதல் படத்தையே தயாரித்து இசையமைத்த யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

சினிமா கனவுகளுடன் வந்து ஸ்டார் ஆகும் நாயகன் பற்றிய கதையாகவே ஸ்டார் உருவாகி வருகிறது என தெரிகிறது. படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி போஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: லியோவுக்கு ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ்!.. தலைவர் 171க்கு இந்த ஹாலிவுட் படமா?.. என்னய்யா லோகி என்ன ஆச்சு?..

கல்லூரியில் கவின் படித்து வரும் போது அவருக்கு ப்ரீத்தி முகுந்தன் மீது காதல் ஏற்பட்ட போது உருவான பாடலாக தற்போது வின்டேஜ் லவ் பாடல் வெளியாகி இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இந்த பாடலை பாடியுள்ளார். கபிலனின் வரிகள் அதிகமாக பாடலுக்கு உயிர் கொடுத்து இசையை சரியான அளவில் வரிகள் தெளிவாக புலப்படும் அளவுக்கு யுவன் உருவாக்கியிருப்பதே இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் கேட்ட மாத்திரத்திலேயே கவர்ந்து விடக் காரணமாக உள்ளது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top