Cinema History
கமல் செய்யாததை எல்லோருக்கும் செய்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் சார் கடவுள்!..
“மறைந்துவிட்டார்” என்ற நிஜத்தை சொன்னாலும், இல்லை இன்றும் அவர் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்று விசும்பலோடு சொல்லக்கூடியவர்களே அதிகம். இந்த நிதர்சனமான உண்மைக்கு சொந்தக்காரர் கேப்டன் விஜயகாந்த்.
தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாரபட்சம் இல்லாமல், என்ன தேவை எனக்கேட்டறிந்து அதை செய்து கொடுத்து, அவர்களை திருப்தி அடையச்செய்தவர் விஜயகாந்த். சுயநலமில்லாத சிந்தனையும், செயல்களுமே அவரை இன்றும் நினைவில் சுற்றி, சுற்றி வர வைத்துக்கொண்டிருக்கிறது.
“ஊமைவிழிகள்” படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத்தொடர்ந்து கதையைக்கூட கேட்காமலேயே விஜயகாந்த் நடித்த படம் “உழவன்மகன்”, ராதிகா, ராதா ஜோடியாக நடித்த இந்த படத்தில் வரும் “உன்னை தினம் தேடும் தலைவன்” என்ற பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருப்பார். அந்த பாடல் இந்த படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக அமைந்தது.
கமல்ஹாசனின் “நாயகன்” பட ஷூட்டிங் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க அதில் பணியாற்றியவர்களுக்கு உணவாக தயிர் சாதம் வழங்கப்பட்டு வந்ததாம். ஆனால் “உழவன்மகன்”, படத்திற்காக பணியாற்றிய அனைவருக்கும் கறிவிருந்து கொடுக்கப்பட்டது தினசரி . அதாவது கமல் செய்யாதத்தை விஜயகாந்த் செய்தார்.
இதனால் வரும் செலவினங்களை தனது சம்பளத்திலிருந்து கொடுப்பதாக சொன்னாராம் விஜயகாந்த். மேலும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் துவங்கி அனைவருக்கும் ஒரே விதமான உணவு தான் வழங்கப்பட வேண்டும் என்பதில் படப்பிடிப்பின் இறுதி நாள் வரை உறுதியாகவும் இருந்து வந்தாராம்.
மேலும் அனைவரையும் சாப்பிட வைத்து விட்டு, அவர்களுக்கு உணவு பரிமாறி விட்ட பின்னரே விஜயகாந்த் சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடித்து வந்தாராம். சற்றே கோபம் அதிமாக கொண்ட குணத்தோடு இருந்தவர் தான், ஆனால் “கோபம் உள்ள இடத்தில் தான், குணம் இருக்கும்” என்ற பழமொழி இவருக்கு நூறு சதவீதம் பொருந்தும் என்ற அளவிற்கு வாழ்ந்து காட்டியவர்.
தனது நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தருடன் சண்டை என்கின்ற ஒன்று இல்லாத அளவே பழகி வந்தாராம். விஜயகாந்திற்கு மணப்பெண் பார்க்க சென்றவர் ராவுத்தர் அப்பொழுது கூட அவர் செல்லாமல், நண்பன் மீது நம்பிக்கை வைத்து , அவர் எடுக்கும் முடிவு சரியாகத்தான் இருக்கும் என்று சொன்னவராம் விஜயகாந்த்.