Cinema History
தாளக்கருவியே இல்லாமல் இளையாராஜா இசை அமைத்த சூப்பர்ஹிட் பாடல்… எந்தப் படம்னு தெரியுமா?
தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்ன என்கிறீர்களா? இப்படியும் இசை அமைக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் இளையராஜா. அது என்ன படம், எந்தப் பாடல் என்று பார்ப்போமா…
கவிப்பேரரசு வைரமுத்து இளையராஜாவைப் பற்றி ஒருமுறை இவ்வாறு பேசினார். அவர் ஆர்மோனியப் பெட்டி முன் உட்கார்ந்தால் மெட்டு போடாமல் எழ மாட்டார். அவர் ஒரு பாட்டுக்கு 6 மெட்டு போடுவாராம். அமைதிப்படையில் சத்யராஜ், மணிவண்ணன் செய்யும் அரசியல் அலப்பறை செம மாஸாக இருக்கும்.
வில்லன் சத்யராஜ், மகன் சத்யராஜ் என ரொம்ப வித்தியாசமாக நடித்து அசத்தியிருப்பார். இந்தப் படத்தில் தான் அல்வா கொடுக்குற சீன் ட்ரெண்ட்டானது. இந்தப் படத்தில் வரும் சொல்லி விடு வெள்ளி நிலவே என்று ஒரு பாடல் வரும். இது படத்தில் வராது.
இதையும் படிங்க… முடிஞ்சா என்கிட்ட மோதி ஜெயிச்சு பாரு! சூப்பர் ஸ்டாருக்கு சேலஞ்ச் விட்ட பவர் ஸ்டார்
படத்தில் வரும் சில காட்சிகளை சேர்த்து இப்போது யூடியூபில் வருகிறது. மகன் சத்யராஜிக்கு ரஞ்சிதாவை பெண் கேட்கப் போவார்கள். குழப்பத்தில் மாப்பிள்ளை யாருன்னு மறுத்துவிடுவார்களாம். இதுல சத்யராஜ் எனக்கு திருமணமே வேண்டாம் என்று சோகத்தில் பாடுவார். ஆனால் ரஞ்சிதாவோ நீ இல்லைன்னா எனக்கு வாழ்க்கை இல்லை என்று சொல்வார். மனோ, சொர்ணலதா இணைந்து பாடிய பாடல்.
பல்லவி, சரணம் வெகு வித்தியாசமாக இருக்கும். புல்லாங்குழல், கிட்டார், ஸ்ட்ரிங்ஸ் எல்லாமே சிறப்பாக இருக்கும். சொல்லி விடு வெள்ளிநிலவே, சொல்லுகின்ற செய்திகளையே, உறவுகள் கசந்ததம்மா, கனவுகள் கலைந்ததம்மான்னு பல்லவி வரும். அதே பாடலில் நாயகன் தொட்ட குறையாவும் விட்ட குறையாகும். வேண்டாம் காதல்…. என்று சொல்லி விட்டு எந்தன் வழி வேறு உந்தன் வழி வேறு ஏனோ கூடல் என்பார்.
அதற்கு நாயகி, உன்னுடைய வரவை எண்ணி உள்ளவரை காத்திருப்பேன், என்னை விட்டு விலகிச் சென்றால் மறுபடி தீக்குளிப்பேன். நான் விரும்பும் காதலனே நீ என்னை ஏற்றுக் கொண்டால் நான் பூமியில் வாழ்ந்திருப்பேன் என்று சோகம் இழையோட பாடல் ரொம்பவே ரசிக்கும் விதத்தில் வரும்.
இந்தப் பாடலில் தாளம் வரும். ஆனால் தாளக்கருவிகள் பயன்படுத்தாமல் பாடலுக்கு இசை அமைத்து இருப்பார் இளையராஜா. அது எப்படின்னா, கீ போர்டுல தாளத்தை செட் பண்ணிட்டு அப்படியே நோட்ல வாசிப்பாரு. தாளக்கருவி பயன்படுத்தி இருந்தால் நாலாவது சுருதில மட்டும் தான் வாசிச்சிருப்பாங்க. ஆனால் இதுல அந்தப் பாட்டு எந்த சுரத்திற்குப் போகுதோ, அந்த சுரத்திற்குப் போயி தாளக்கருவியை வாசிச்சிருப்பாங்க.
நல்ல கவனிச்சிப் பார்த்தால் தாளக்கருவி இல்லாமலேயே கீ போர்டுல அழகா தாளத்தை வாசிச்சிருப்பாரு. இன்னொரு விஷயம் என்னன்னா, எந்த சுரத்திற்குப் பாட்டுப் போகுதோ, அந்த சுரத்திற்கு தாளமும் போகும். சரணத்தைக் கவனித்துப் பார்த்தால் இது தெரியும். அங்கும் பல்லவியில் இருக்கும் தாளம் தான் வரும். அப்படிப்பட்ட வித்தியாசமான பாடல் இது.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
1994ல் மணிவண்ணன் இயக்கத்தில் புரட்சித்தமிழன் சத்யராஜின் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடங்களில் வெளியான சூப்பர்ஹிட் படம் அமைதிப்படை. சத்யராஜின் திரையுலகப் பயணத்தில் இது ஒரு மைல் கல்லாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.