Cinema History
என் காமெடியை கெடுத்து விட்டான் ‘கருப்பன்’… விஜயகாந்தை நக்கலடித்த கவுண்டமணி…
நகைச்சுவை நடிகர்களில் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் கவுண்டமணி. தான் நடித்த நாடகங்களிலும், யதார்த்த வாழ்விலும் ஒருவர் பேசுவதற்கு ஏற்ற பதில்களை நகைச்சுவையாக சொல்லி “கவுண்ட்டர்” கொடுத்து வந்தால் ‘மணி’ என்கின்ற இவரது இயற்பெயரோடு “கவுண்டர்” என்ற பட்டம் வழங்கப்பட்டு ‘கவுண்டமணி’ என அழைக்கப்படுபவர்.
படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களை கலாய்த்து தள்ளும் குணம் இவருக்கே உரித்தானது . ஒரு முறை நடிகர் விவேக் “பூமகள் ஊர்வலம்” படத்தில் ‘சோலோ’ காமெடி செய்திருப்பார். அதற்கு முன்னர் வரை பலருடன் இணைந்தே காமெடி செய்து வந்தார். வேறு ஒரு படப்பிடிப்பிற்காக அங்கே வந்த கவுண்டமனி ‘நம்ம பையன் தனியாளா காமெடி பண்ணியிருக்கான்.. ஜனங்க பாவம்’ என கிண்டல் செய்தாராம்.
சக நடிகர்களுக்கு புனைப்பெயர் வைத்து நக்கல் நடிப்பார். ‘நடிப்பு சுடர்’ என பிரகாஷ்ராஜிற்கும், ‘மயிலாப்பூர் மேக்கப்மேன்’ என கமல்ஹாசனுக்கும் இது போல ஒவ்வொருவருக்கும் தனி பெயர் வைத்து அழைப்பாராம். அதே வேளையில் சற்றே கோபமும் இவரிடம் உண்டாம். ஒருமுறை படப்பிடிப்பிற்கு வந்த விசித்திரா தன்னை பார்த்து வணக்கம் தெரிவிக்கவில்லை என கோபித்து கொண்டாராம். வெகு நாட்கள் கழித்தே சமரசம் ஆனாராம்.
ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபாய் சம்பளம் என பேசி அந்த காலத்திலேயே அதிக ஊதியம் வாங்கிய நகைச்சுசுவை நடிகர் என்ற சாதனை படைத்தவர். இவர் நிர்ணயித்த தொகையை தர தயாரிப்பாளர்களும் தயாராக இருந்தனர். “சேதுபதி ஐ.பி.எஸ்” படத்தில் இவர் நடித்த காமெடி காட்சிகள் மகப்பெரிய வெற்றியடைந்தது.
இவரும், செந்திலும் இந்த படத்தில் செய்த கலாட்டா இன்றும் மறக்க முடியாதது. அதே படத்தில் வந்த ‘கப்பல் நடுவுல நின்னுட்டா நீங்க தண்ணிக்குள்ள இறங்கி தள்ளனும், அதுக்குத்தான் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்’ என செய்த நகைச்சுவை காட்சி பார்ப்பவர்களை விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கும் இன்றும்.
அந்த படத்தின் நகைச்சுவை ஹிட்ஆனது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கவுண்டமனியிடம் கேட்டபொழுது. நல்லாத்தான் இருந்துச்சு, ஆனா அந்த கருப்பன் கெடுத்துட்டான், ‘கேப்டன்” விஜயகாந்தின் அபார நடிப்பு தனது காமெடியை மிஞ்சி விட்டதாக தன்னுடைய ‘நக்கல்’ பாணியில் கூறியிருந்தாராம்.