Cinema History
அம்மா சொன்னதால் மியூசிக் போட்ட இளையராஜா!.. இசைஞானிக்கு இவ்வளவு தாய்ப்பாசமா?!..
அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்திலேயே அசத்தலான பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த படத்தில் இளையராஜா போட்ட ‘அன்னக்கிளி உன்னத் தேடுதே’ மற்றும் ‘மச்சானை பாத்தீங்களா’ ஆகிய பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
அதன்பின் பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார். இளையராஜாவின் பாடல்கள் எல்லா திசைகளிளிலும் ஒலிக்க துவங்கியது. ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவை காப்பாற்றும் கடவுளாகவும் அவர் மாறினார்.
இதையும் படிங்க: இளையராஜாவிடம் தேவா பாட்ட பாடி மெட்டு கேட்ட இயக்குனர்!.. என்னாச்சி தெரியுமா…
இளையராஜாவின் இசையை நம்பியே பல படங்கள் உருவானது. 80,90களில் அதாவது 20 வருடங்கள் சினிமாவில் இளையராஜாவை அடிக்க ஆளே இல்லை என சொல்லுமளவுக்கு நிலைமை இருந்தது. ஒரே நாளில் பல திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்தார். காலை 7 மணிக்கெல்லாம் ரிக்கார்டிங் தியேட்டருக்கு வந்துவிடுவார்.
மதியம் வரை ஒரு படத்திற்கு பாடல்கள் போடுவார். அதன்பின் மாலை வரை மற்றொரு படத்திற்கு பின்னணி இசை அமைப்பார். இப்படி ஓடி ஓடி உழைத்தவர்தான் இளையராஜா. இப்போதும் பலரின் கார் பயணங்களில் ஒரு நண்பனாக பயணிப்பது இளையராஜவின் இசையில் உருவான பாடல்கள்தான்.
இப்போது அவரின் வாழ்க்கை கதை சினிமாவாக உருவாகவிருக்கிறது. இதில், தனுஷ் ஹீரோவாக நடிக்க போகிறார். படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. தனது கதைக்கு இளையராஜாவே இசையமைக்கவிருக்கிறார். இளையராஜா தனது தாய் சின்னத்தாய் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தவர்.
இதையும் படிங்க: இளையராஜாவின் 1000மாவது படத்திற்கு புதுப்பாடலாசிரியர்… ஏன்னு தெரியுமா?
ஒருமுறை தனது தயாரிப்பில் உருவான ஒரு படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் கேட்டார் சங்கிலி முருகன். ஆனால், பல படங்கள் கையில் இருப்பதால் இசையமைக்க முடியாது என மறுத்துவிட்டார் இளையராஜா.
உடனே அங்கே இருந்த ராஜாவின் அம்மாவிடம் போன சங்கிலி முருகன் ‘உங்க பையன் இப்படி சொல்லிட்டாரும்மா’ என சொல்ல, உடனே ராஜாவை அழைத்த அவரின் தாய் ‘இது நம்ம புள்ளப்பா. உன் வேலை என்ன.. பாட்டு போடுறதுதான.. இவர் படத்துக்கு போட்டுக்குடு’ என சொல்ல ராஜாவோ ‘சரிம்மா. போடுறேன்’ என சொல்லிவிட்டாராம். இந்த தகவலை ராஜாவின் சகோதரர் கங்கை அமரன் ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.