Connect with us

Cinema News

உனக்கெல்லாம் நடிப்பே வராது.. என்னத்த படிச்சி கிழிச்ச!.. ரஜினியை திட்டிய இயக்குனர்…

KBalachander: இயக்குனர் கே.பாலசந்தர் கோலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்த ரஜினிகாந்தை அவருக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும் அவரை பல இடங்களில் திட்டியும் இருக்கிறாராம். அதிலும் ஒருநாள் கடுமையாக வாக்குவாதமே வந்ததாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்தை திரைப்படக் கல்லூரியில் முதன் முதலாக பார்த்த கே. பாலச்சந்தருக்கு அவரை ரொம்பவே பிடித்து விடுகிறது. ஒருநாள் அவரை தன்னுடைய அலுவலகத்திற்கு வர சொல்லிய பாலச்சந்தர் சில பொதுவான உரையாடல்களுக்கு பிறகு நடித்துக் காட்ட சொன்னாராம்.

இதையும் படிங்க: ப்பா! பேய் மாதிரி இருக்கு!.. ஓவர் மேக்கப்பில் நயன்தாரா.. புது லுக்கை பார்த்து பயந்து போன ஃபேன்ஸ்!..

அங்கு தொடங்கிய இருவரின் நெருக்கம் பல வருடங்கள் தொடர்ந்தது. ரஜினிகாந்துக்கு நிறைய ஹிட் படங்களை கொடுத்து அவருக்கான கேரியரை சரியாக அமைத்துக் கொடுத்தவர் கே பாலச்சந்தர் தான். தெரியாத விஷயத்தை ரஜினிகாந்து சொல்லிய மாட்டிய போது கூட அசராமல் சிரித்து கொண்டே கடந்து சென்றாராம்.

ஆனாலும் அவருக்கும் ரஜினியின் மீது கொடூர கோபம் வந்ததாம். ரஜினிகாந்த் மற்றும் கமல் இணைந்து நடித்த திரைப்படம் அவர்கள். அப்படத்தில் ஷூட்டிங்கின் போது ஒரு காட்சியை ரஜினியால் செய்யவே முடியவில்லையாம். உனக்கு நடிப்பு வராது, உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும். திரைப்பட கல்லூரியில் நீ என்ன படிச்சி கிழிச்சியோ! 

இதையும் படிங்க: விஜயகாந்த் போலவே பெரிய மனசு!.. தம்பிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய விஜய பிரபாகரன்.. இத்தனை கோடியா?

`மூன்று முடிச்சு’ படத்தில் வசனம் எல்லாம் ரொம்ப கம்மி. சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் பிடிக்கிறதுனு ஸ்டைலா முடிச்சிட்ட. ஆனா இந்த படத்தில் உன் கேரக்டருக்கு நிறைய வசனம் இருக்கு. உனக்காகலாம் கேரக்டரை மாத்தவே முடியாது. இவனை தூக்கிட்டு ஜெய்கணேஷை போடுங்கனு கத்திவிட்டு சென்றாராம். 

அன்றைய ஷூட்டிங் கூட கேன்சல் ஆனது. இந்த விஷயத்தினை ரஜினியை கே.பாலசந்தர் பேட்டி எடுப்பது போல அமைக்கப்பட்டு இருந்த ஒரு நிகழ்ச்சியில் ரஜினிகாந்தே சொல்லி இருப்பார். அன்னைக்கு தொடங்கிய நான். இப்போ சூப்பர்ஸ்டாரா இருக்கேன் என்றால் அது உங்க அசீர்வாதம் தான் என்றாராம்.

Continue Reading

More in Cinema News

To Top