Cinema History
சரோஜா தேவியா?.. ஜெயலலிதாவா?!.. எம்.ஜி.ஆர் பட வாய்ப்பு தட்டி தூக்கியது யார் தெரியுமா?!..
தமிழ் சினிமாவில் கதநாயகர், கதாநாயகியர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அவர்களின் படங்கள் வெளியாகும் போது முதல் ஆளாக முண்டி அடித்து முன் வரிசையில் அமர்ந்து தங்களது அபிமான நடிகர், நடிகைகளை பார்த்து வந்த ரசிகர்கள் தங்களின் விருப்ப ஜோடிகளுக்கு முக்கியத்துவம் வழங்கியும் வருகின்றனர்.
“விஜய் – நயன்தாரா”, “அஜீத் – திரிஷா’ என தற்போது வரை தங்களது விருப்ப ஜோடிகள் நடிக்கும் படங்களை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள். 60களில் “சிவாஜி – பத்மினி”, “ஜெமினி – சாவித்திரி’ ஜோடிகள் ஒரு காலத்தில் ரசிகர் பெரு மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வந்தவர்கள்.
இதில் முக்கியமான இடத்தை பிடித்தவர்கள் “எம்,ஜி,ஆர் – ஜெயலலிதா” கோடி. இவர்கள் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாக, இவர்களின் நடிப்பைத்திரையில் பார்க்கவே ரசிகர் கூட்டம் அலை அலையாக திரையரங்குகளுக்கு போனது. இப்படி இருக்கையில் ஆர்.ஏம்.வீரப்பன் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்து வெளியான “காவல்காரன்” படத்தில் நடிக்க முதலில் சரோஜாதேவியை தான் “கமிட்” செய்திருக்கிறார்கள். இதற்கு எம்.ஜி.ஆரும் ஒத்துக்கொள்ள பூஜையும் நடத்தப்பட்டதாம்.
ஆனால் ஆர்.எம்.வீரப்பனின் எண்ணமோ மாறுபட ஜெயலலிதா இந்த கதாபாத்திரத்ததை ஏற்றால் நன்றாக இருக்கும் என விரும்பியிருக்கிறார். இளம் வயதான ஜெயலலிதாவை இரண்டு குழந்தைகளுக்கு தாயாக எப்படி நடிக்க வைப்பது?, அது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா? அந்த அளவிலான முதிர்ச்சி அவரிடம் இருக்கிறதா? என்றெல்லாம் எம்.ஜி.ஆர் கேட்க., இது தான் சரியாக இருக்கும் என தயாரிப்பாளர் உறுதியாக கூறினாராம்.
சரோஜாதேவியை சமாதானப்பதிவுத்தும் முயற்சியில் எம்.ஜி.ஆரும், வீரப்பனும் ஈடுபட, தானாகவே படத்திலிருந்து விலகிக்கொள்வதாக கூறிவிட்டார். முன்னதாக இரண்டே இரண்டு காட்சிகளில் மட்டும் தான் குழந்தைகளுக்கு தாயாக வருவது இடம் பெறும் என ஜெயலலிதாவின் அம்மாவிடம் எடுத்து கூறி, அதன் பின்னரே நடிக்க வைக்கப்பட்டாராம்.
துவக்கத்தில் துளியளவும் இதில் விருப்பமலிருந்த எம்.,ஜி.ஆரோ வீரப்பனின் முடிவில் தலையிடாமல் அவரது விருப்பத்தை ஏற்றுகொண்டாராம். படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் “மெல்லப்போ, மெல்லப்போ, மெல்லிடையாளே” பாடலில் ஜெயலலிதாவின் நடிப்பு எம்.ஜி.யாரை கவர, ஆர்.எம்.வீரப்பனை அழைத்து பாராட்டினாராம்.