விக்ரமை வைத்து எஸ்.ஜே.சூர்யா சொன்ன கதை!.. ஆட்டைய போட்ட அஜித்!.. அட அந்த படமா?!..

Published on: April 7, 2024
vikram
---Advertisement---

சினிமா உலகை பொறுத்தவரை பெரிய ஹீரோக்கள் படம் எனில் படத்தை தயாரிப்பது அதாவது பணத்தை முதலீடு செய்வது தயாரிப்பாளர்கள்தான் என்றாலும் ஹீரோக்களை முன்னுறுத்தியே படங்களின் வேலை நடக்கும். ஹீரோ என்ன சொல்கிறாரோ அதுதான் இறுதியான முடிவு.

அவர்தான் இயக்குனரையும், கதாநாயகி மற்றும் அப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை முடிவு செய்வார். அவர் யாரை சொல்கிறாரோ அவர்தான் இசையமைப்பாளர். 50,60களில் சினிமா தயாரிப்பாளர்களின் கையில் இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் பெரிய ஹீரோ ஆனபின் அவரே எல்லாவற்றையும் முடிவு செய்தார்.

இதையும் படிங்க: ஆயிரம் பேருக்கு அஜித் செய்த உதவி! எல்லாரும் ஏமாத்திட்டாங்க.. ஓ அதான் இப்படி இருக்காரோ

ஆனால், அந்த காலத்தில் அவர் மட்டுமே அப்படி இருந்தார். ஆனால் இப்போது பல நடிகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஒரு இயக்குனர் ஒரு கதையோடு வந்தால் அதை தனக்கு ஏற்றது போல மாற்றிவிடுவார்கள். கதையில் பல மாற்றங்களை கொண்டு வருவார்கள்.

சில நடிகர்கள் இயக்குனர் சொன்ன கதையை மொத்தமாக மாற்றிவிடுவார்கள். அல்லது சிதைத்து விடுவார்கள். இதில் பல புதுமுக இயக்குனர்கள் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள். சில சமயம் அது வெற்றிப்படமாகவும் மாறிவிடும். இயக்குனர் வஸந்திடம் உதவி இயக்குனராக இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா.

இதையும் படிங்க: 14 முறை கமலுடன் மோதிய அஜித் படங்கள்!.. ஜெயித்தது யாரு?.. உலக நாயகனா? அல்டிமேட் ஸ்டாரா?..

ஆசை படத்தில் அவர் வேலை செய்யும் போது அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் அஜித்திடம் சில கதைகளை சொல்லி இருக்கிறார். அதில் ஒன்றுதான் விக்ரமும், அஜித்தும் இணைந்து நடிப்பது போல சொன்ன டபுள் ஹீரோ சப்ஜெக்ட். இந்த கதையை கேட்ட அஜித் ‘இதில் 2 நடிகர்கள் வேண்டாம். 2 வேடங்களிலிலும் நானே நடிக்கிறேன். டபுள் ஹீரோ கதையில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசை’ என சொல்லி இருக்கிறார்.

vali

அப்படி உருவான திரைப்படம்தான் வாலி. அதாவது அஜித்தின் அண்ணன் வேடத்தில் விக்ரம் நடிப்பது போல கதை சொல்லி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால், அந்த வேடத்திலும் அஜித்தே நடித்து அசத்தியிருந்தார். துவக்கத்தில் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் சில நாட்களில் இப்படம் பிக்-அப் ஆகி ஹிட் அடித்தது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.