‘கமல்ஹாசன் – ஷங்கர்’ கூட்டணியில் வெளிவந்த “இந்தியன்” தமிழ் திரை உலகையே புரட்டி போட்ட திரைப்படம் . இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் கமல்ஹாசன். பாடல், நகைச்சுவை, பின்னணி இசை என எல்லா விதத்திலும் அந்த படம் ஒரு முத்திரை பதித்திருந்தது.
லஞ்சத்திற்கு எதிராக போராடும் கொள்கை வீரனாக தந்தை ‘சேனாதிபதி’ கமல்ஹாசன், தன் சுயநலத்திற்காக எதையும் செய்யும் மகன் ‘சந்துரு’கமல்ஹாசன். கம்பீரமான தோற்றத்தோடு வயதான வேடத்தில் வந்த ‘சேனாதிபதி’ கமலே மக்களின் மனதை கவர்ந்தவர்.
இவருக்கு இணையாக அதே போன்ற வயதான தோற்றத்தில் சேனாதிபதியின் மனைவியாக நடித்தார் சுகன்யா. சுதந்திர போராட்ட காலத்தில் கமலின் நாட்டுப்பற்று உணர்வால் ஈர்க்கப்பட்டு பின்னர் அவரின் மனைவியாவார் சுகன்யா. இருவருக்கும் தேச பக்தி அதிகம், பொது நலனிற்காக மகனை பலியிடும் தந்தை . இப்படிப்பட்ட கதையம்சத்தால் வசூலை மட்டுமல்லாமல் ரசிகர்களின் பாராட்டுக்களையும் அள்ளிக்குவித்தது “இந்தியன்” படம்.

கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகிறது “இந்தியன்” முதல் பாகம் வெளியாகி. இப்போது ‘கமல் – ஷங்கர்’ என அதே கூட்டணியில் வெளிவர தயாராக உள்ளார் “இந்தியன் 2 “. இந்த படத்தினுடைய போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. ‘சேனாதிபதி’ கமல்ஹாசனே மீண்டும் இந்த படத்திலும் வலம் வரப்போகிறார் என்பதனை உறுதி செய்கிறது அந்த போஸ்டர்.
இப்போது உள்ள தலைமுறைக்காக தமிழ் சினிமா பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது. இப்படிப்பட்ட நேரத்தில் கமல் அரசியல் கட்சி ஒன்றினை துவங்கி தற்போது கூட்டணி வரை சென்று அவரது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் போஸ்டருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என ‘வலைப்பேச்சு’ அந்தனன் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியலில் கமல் எடுத்துள்ள நிலைப்பாடு அவரது சுயநலத்திற்காக தான் என பலரும் பேசி வருகின்றதாகவும். கமலஹாசனின் தனிப்பட்ட செல்வாக்கில் சந்தேகம் எழுந்துள்ள நேரத்தில் ‘லஞ்சம். ஊழலுக்கு’ எதிராக போராடுவது போல கதை அமைந்தால் அது ஏற்கப்படுமா? என்றும். மாறி வரும் நாகரீகம், மாற்று சிந்தனை கொண்ட இளைஞர் பட்டாளம் என இப்பொழுது உள்ள சூழ்நிலையில் கமல் நடித்துள்ளதாலே இந்த படத்திற்கான வரவேற்பு குறையலாம், “இந்தியன்” பாகம் ஒன்று வெளிவந்த நேரத்தில் கமல் மீது இருந்த ஈர்ப்பு தற்பொழுது இருக்கிறதா? என்பதனை இந்த படத்தின் முடிவு சொல்லிவிடும் எனவும் கருத்து கூறியிருக்கிறார் .





