60,70களில் எம்.ஜி.ஆர் எப்படிப்பட்ட ஆளுமை மிக்க நடிகராக திரையுலகில் வலம் வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். சிறு வயது முதல் நாடகங்களில் நடித்து அதன்பின் சுமார் 10 வருடங்கள் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக மாறியவர் இவர்.
ஆக்ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர். மேலும், ஏழைகளின் பிரச்சனையை பேசுவது போலவும், அவர்களுக்கு எம்.ஜி.ஆர் உதவுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதோடு, எம்.ஜி.ஆரின் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரின் படத்தில் இடம் பெற்ற பாடல்கள்தான்.
இதையும் படிங்க: வாண்டடா போய் தனக்குத் தானே ஆப்பு வைத்துக்கொண்ட கமல்!.. கல்லா கட்டுமா இந்தியன் 2?…
எம்.ஜி.ஆர் சொந்த வாழ்வில் 3 திருமணங்களை செய்து கொண்டவர். முதல் 2 மனைவிகளும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட நடிகை ஜானகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒருபக்கம், நடிகைகளுடன் தொடர்பு படுத்தி எம்.ஜி.ஆரை பற்றி பல கிசுகிசுக்களும் எப்போதும் உலா வரும். ஆனால், எதற்கும் ஆதாரம் இல்லை.

இந்நிலையில், எம்.ஜி.ஆரிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன நடிகையை பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். அவர்தான் நடிகை ஸ்ரீவித்யா. 80 காலகட்த்தில் அழகான கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீவித்யா. கார்நாடகா இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரின் மகள் இவர். செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த ஸ்ரீவித்யா தனது வாழ்வில் பல கஷ்டங்களை பார்த்தவர்.
இதையும் படிங்க: இது நடந்தாதான் நான் உள்ளயே வருவேன்!.. சிவாஜி ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபப்பட்ட ரஜினி!…
அவரை பாடகி ஆக்கிவிட வேண்டும் என்றே அவரின் அம்மா விரும்பினார். ஆனால், நடிப்பு, நடனம் ஆகியவற்றை கற்றுக்கொண்டு நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டவர் ஸ்ரீவித்யா. அவரின் வீட்டின் அருகேதான் நடன சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகிணி ஆகியோர் குடியிருந்தனர். சிறுமியாக இருந்தபோது அவர்களின் வீட்டுக்கு போய் விளையாடுவாராம் ஸ்ரீவித்யா.
ஒருநாள் ‘உனக்கு பிடித்த நடிகர் யார்? என அவர்கள் ஸ்ரீவித்யாவிடம் கேட்க ‘எம்.ஜி.ஆர்’ என சொல்ல அவர்கள் எம்.ஜி.ஆருக்கே போன் போட்டு கொடுத்துவிட்டார்களாம். கொஞ்சமும் பயப்படாத ஸ்ரீவித்யா எம்.ஜி.ஆரிடம் ‘ஐ லவ் யூ’ என சொல்லிவிட்டாராம். பின்னாளில் அம்மாவிடம் எப்படியோ போராடி சம்மதம் வாங்கி நடிகையானார் ஸ்ரீவித்யா. மேலும், கமலுடன் அவருக்கு காதலும் ஏற்பட்டது. ஆனால், பெற்றோர் சம்மதிக்கவில்லை என்பதால் அது திருமணத்தில் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
