ஹாலிவுட்டின் உல்டாவாக வந்த தமிழ் படங்கள்… எம்.ஜி.ஆர், சிவாஜி, அஜித் யாரும் தப்பலயே!..

Published on: April 8, 2024
alibaba
---Advertisement---

ஒரு திரைப்படம் வெற்றி பெற எல்லா அம்சங்களும் சரியாக அமைய வேண்டும்.  நடிப்பு, நகைச்சுவை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், ஒளிப்பதிவு என அனைத்தும் முக்கியத்துவம் பெறுபவையாக இருக்கும் படங்களே மனதில் நிற்கும்.

ஆனால் இவற்றில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது “கதை”.   நல்ல “கதை” அம்சம் கொண்ட படங்கள் எளிதில் ரசிகர்களை சென்றடையும் என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி “கதை” என்பது படத்தின் இன்றியமையாத ஒன்றாக உள்ள நிலையில், பல்வேறு மொழிகளில் வந்து வெற்றி அடைந்த படங்களின் “கதை” அல்லது “கதைக்கருவை” கொண்டு வெளிவந்த தமிழ் படங்கள் ஏராளம்.

இதில் வாகை சூடியவைகளும்  அதிகமே.  இப்படி ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற படங்களின் கதை,  அதனை தழுவி வந்த தமிழ் படங்கள் சிலவற்றை பற்றி பார்ப்போம். ‘எம்.ஜி.ஆர்’. நடிப்பில் வெளிவந்த “அலிபாபாவும், நாற்பது திருடர்களும்”, “அன்பே வா”, “பெற்றால் தான் பிள்ளையா”, “சிரித்து வாழ வேண்டும்” படங்கள்  முறையே “தி பாக்தாத் தீஃப்” (The Baghdad Thief),

sivajee
sivajee

 

“கம் செப்டம்பர்” (Come September), “தி கிட்” (The Kid) “டெத் ரிட்ஸ் எ ஹார்ஸ்” (Death Rides A Horse) படங்களின் கதைகளே. ‘சிவாஜி’ யின் “அந்த நாள்” ஆங்கிலத்தில் வெளிவந்த “ரக்ஷாமோன்” (Rakshamon). “சேஸ் ய க்ரூகட் ஷாடோ   “Chase A Crooked Shadow”  தமிழில் வெற்றி கண்ட அந்த கால திரில்லர் படமான  “புதிய பறவை”

இதனைப்போல ‘சுரேஷ் மேனன்’, ‘ரேவதி’ நடித்து வெளிவந்த “புதியமுகம்” படம் டுவிஸ்ட் ஆஃப் ஃபேட் (Twist Of Fate). “பாய்ன்ட் ஆஃப் நோ ரிடர்ன்” (Point Of No Return) படம்  ‘அஜீத்குமார்’ நடிப்பில் இயக்குனர் ‘வாசு’ இயக்கத்தில் வெளிவந்த “பரமசிவன்”.

ajith
ajith

இயக்குனர்களின் கற்பனையில் தோன்றிய  கதை தான் படங்களாக திரையில் வெளிவருகின்றது என எண்ணிக்கொள்ளும் ரசிகர்களில் பலருக்கு தெரியாத விஷயம்  இது . சினிமா ஆர்வலர்கள் இது போன்ற  “ரீ-மேக்” தழுவியே பல படங்கள் திரையை தொடும் என்பதனை நன்கு அறிவர். இதனைப்போலவே தமிழ் இயக்குனர்களின் சிந்தனைகள்  பிற மொழி படங்களாக  மாறிய வரலாறும் உண்டு உலக திரைத்துறையில்.

Sankar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.