
Cinema News
எம்.ஜி.ஆர் ரத்தம் பட்ட மேஜை, நாற்காலிகள்!. முதல்வரானதும் பொன்மன செம்மல் செய்தது இதுதான்!..
Published on
By
எம்.ஜி.ஆர் வசதியான குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் அப்பாவின் மறைவால் வறுமையின் உச்சத்தை பார்த்தவர். இலங்கையில் இருந்த அவரின் குடும்பம் தந்தையின் மறைவால் தமிழகத்தில் உள்ள கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தது. தாய் சத்யா, எம்.ஜி.ஆர் மற்றும் அவரின் அண்ணன் சக்கரபாணி என 3 பேர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
வீட்டிலே வறுமை மட்டுமே நிரந்தரமாக இருந்தது. அரிசி வாங்க கூட பணமில்லை. இதனால், அருகிலிருந்த சில வீடுகளில் வேலை செய்தார் எம்.ஜி.ஆரின் தாய் சத்யா. ஒருகட்டத்தில், பள்ளி படிப்பை விட்டுவிட்டு நாடகத்திற்கு நடிக்க போனார் எம்.ஜி.ஆர். அவருடன் அவரின் சகோதரர் சக்கரபாணியும் போனார்.
இதையும் படிங்க: ஹாலிவுட்டின் உல்டாவாக வந்த தமிழ் படங்கள்… எம்.ஜி.ஆர், சிவாஜி, அஜித் யாரும் தப்பலயே!..
இருவரும் நாடக கம்பெனியில் சேர்ந்து பல வருடங்கள் நாடகங்களில் நடித்தனர். அதன்பின் தனது 37வது வயதில் சினிமாவில் நுழைந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், சிவாஜியை போல துவக்கத்திலேயே அவருக்கு ஹீரோ வாய்ப்பு கிடைக்கவில்லை. சுமார் 10 வருடங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.
அதன்பின்னர் ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். சிவாஜி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள செண்டிமெண்ட் கதைகளில் நடித்தால் எம்.ஜி.ஆரோ மக்களுக்காக போராடும் ஆக்ஷன் கதைகளில் நடித்தார். அவரின் வாழ்வில் நடந்த ஒரு துயர சம்பவம் என்னவெனில் நடிகர் எம்.ஆர்.ராதா அவரை துப்பாக்கியால் சுட்டதுதான். இதனால், எம்.ஜி.ஆரின் குரலில் சில மாற்றம் ஏற்பட்டது.
எம்.ஆர்.ராதா சில வருடங்கள் சிறையில் இருந்தார். எம்.ஜி.ஆர் இனிமேல் அவ்வளவுதான். சினிமாவில் நடிக்க மாட்டார். அவரால் பேசமுடியாது என பலரும் பேசினார்கள். ஆனால், மீண்டு வந்தார் எம்.ஜி.ஆர். அவர் தமிழகத்தின் முதல்வரானதும் ராமபுரம் வீட்டில் சில மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தது.
இதையும் படிங்க: பாஸ்வேர்ட் சொன்ன எம்.ஜி.ஆர்!.. அள்ளிக்கொடுத்த ‘ஆளவந்தான்’!… கையிலெடுத்த ‘கோச்சடையான்’!
முன் ஹாலை ஒட்டி இடது, வலது என இரண்டு அறைகள் இருந்தன. இடது புறத்தில் இருந்த அறையை எம்.ஜி.ஆர் படப்பிடிப்புக்கு போகும் போது மேக்கப் போட பயன்படுத்தி வந்தார். வலது பக்கம் அவரின் தனி அறை இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த நாற்காலி, மேசைகளை எடுத்துவிட்டு புதிதாக மாற்றிவிடலாம் என அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், எம்.ஜி.ஆர் அதை வேண்டாம் என சொல்லிவிட்டார்.
MR Radha and MGR
அதற்கு காரணம் எம்.ஆர்.ராதா அவரை சுட்டபோது அவர் சிந்திய ரத்தம் அந்த மேசை, நாற்காலி மீது இருந்தது. எப்படிப்பட்டவர்களின் மனதையும் பணம் மாற்றிவிடும் என்பதற்கு அந்த மேசை, நாற்காலிகள் சாட்சிகளாக இருக்கட்டும் என சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். அதனால் அந்த மேசை, நாற்காலிகள் அங்கிருந்து அகற்றப்படவில்லை.
Bison: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வரப் போகும் திரைப்படம் பைசன். துருவ் விக்ரம் நடிப்பில் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன....
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...