‘சொர்க்கமே என்றாலும்’ ஸ்டைலில் ரைடு போகும் விஜய்! ‘கோட்’ பட செட்டில் இருந்து வெளியான வீடியோ

Published on: April 9, 2024
vijay
---Advertisement---

Actor Vijay: விஜய் என்றாலே மாஸ்தான். அந்தளவுக்கு அவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹைப்பை ஏற்படுத்தி வருகின்றன. விஜயின் படங்களை பொருத்தவரைக்கும் கதையை விட ஆக்‌ஷன் மற்றும் மாஸான சம்பவங்கள் இருந்தாலே அதை ரசிகர்கள் கொண்டாடி விடுகின்றனர். பீஸ்ட் படத்தின் கதை பல விமர்சனத்திற்கு உட்பட்டாலும் வசூலில் சாதனை படைக்கத்தான் செய்தது.

அதற்கு காரணம் விஜய்தான். அவருடைய ரசிகர்கள் எப்பொழுதுமே விஜயை தூக்கி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் கோட் படத்தின் மீதும் ரசிகர்கள் பெரும் ஆர்வமாக இருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இப்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் இருபெரும் ராஜாக்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.

இதையும் படிங்க: கமல் நடித்த வெள்ளி விழா படங்களின் லிஸ்ட்!.. வசூல் ராஜாவாக கலக்கிய உலக நாயகன்…

அஜித்தை வைத்து தரமான சம்பவத்தை செய்த வெங்கட் பிரபு விஜய்க்கு ஒரு பெஸ்ட்டான படத்தைத்தான் கொடுப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். புது புது டெக்னாலஜியுடன் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா நடிக்கிறார்கள்.

கூடவே பிரசாந்த், பிரபுதேவா,லைலா போன்ற முக்கியமான நடிகர்களும் நடித்து வருகிறார்கள். படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் 10 நாள்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்ற தகவல் வெளியானது. சமீபத்தில்தான் படப்பிடிப்பிற்காக விஜய் துபாய் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையும் படிங்க: நான் நடிச்ச படத்தை என் பையனாலே பாக்க முடியல! ‘ஹாட்ஸ்பாட்’ நடிகை சொன்ன ஷாக்கான தகவல்

இந்த நிலையில் கோட் படத்தின் செட்டில் இருந்து விஜயின் வீடியோ ஒன்றை படத்தின் தயாரிப்பாளரான ஐஸ்வர்யா கல்பாத்தி அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சிங்கிள் ஸ்கேட்டிங்கில் விஜய் ரைடு போகும் மாதிரியாக இருக்கிறது. அதை பார்த்த விஜய் ரசிகர்கள் எப்பவும் போல இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ லிங்: https://www.instagram.com/reel/C5iKP1xN_vd/?utm_source=ig_web_copy_link

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.