Cinema History
இப்படித்தான் அந்த பாட்டுக்கு மியூசிக் போட்டாரா இளையராஜா?!.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..
இளையராஜா தனது பாடல்களில் சிலவற்றில் ரொம்பவே வித்தியாசத்தைக் காட்டியிருப்பார். அப்படி ஒரு பாடல் தான் இது. யாருமே இப்படி ஒரு இசையைப் போட்டு இருக்க மாட்டார்கள். அதென்ன பாடல்? என்ன இசை என்று பார்க்கலாமா…
தமிழ்சினிமா உலகைப் புதிய பரிணாமத்திற்கு இட்டுச் சென்றவர் இசைஞானி இளையராஜா. 80, 90 காலகட்டங்களில் இசை என்றாலே அது இவர் தான் என்றாயிற்று. எந்தப் பாட்டு என்றாலும் அது இவர் போட்டால் ஹிட் தான். அந்த இசையும் இவர் புதிதாகக் கொண்டு வந்தால் அது டிரெண்ட் செட்டாகி விடும். அப்படி ஒரு பாடல் தான் இது.
1981ல் வெளியான படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே. பஞ்சு அருணாசலம் எழுதிய இந்தப் பாடலை எஸ்.பி.பி.யும், ஜானகியும் பாடினார்கள். ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்ற ஒரு இனிய மெலடி சாங்.
இந்தப் பாடல் முழுவதும் நடிகர் மோகனும், சுகாசினியும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஓடிக்கொண்டே இருந்தாலும் அவர்களது முகத்தைக் கூட நாம் தெளிவாகப் பார்க்க முடியாது. அப்படி இருந்தும் இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இப்போதும் சில 80ஸ் கிட்ஸ்களுக்கு இது தான் ரிங் டோன். இந்தப் பாடல் இவ்வளவு பெரிய ஹிட்டானதற்குக் காரணம் இளையராஜாவின் இசை அமைப்புதான்.
இதையும் படிங்க… பணம் தேவைக்கு அதிகமா இருந்தா இப்படி எல்லாம் நடக்கும்!… விஜய் ஆண்டனி கொடுத்த புதுவிளக்கம்
இந்தப் பாடல் முழுவதும் வரும் ஜாக்கிஹ் ஷூவின் ஓசைக்காக இளையராஜா என்னென்னவோ சத்தங்களை எழுப்பிப் பார்த்தாராம். ஆனால் எதுவுமே செட்டாகவில்லையாம். கடைசியாக தொடையில் தட்டி அந்த சத்தத்தை வரவழைத்தாராம். அப்படி பாடல் முழுக்க ஒருவர் தொடையில் தட்டிக் கொண்டே இசையை அமைத்திருந்தார். அப்படி ஒரு மாறுபட்ட இசை அமைப்பை இந்தப் பாடலுக்காக இளையராஜா உருவாக்கினார். என்ன இருந்தாலும் ராஜாவுக்கு நிகர் ராஜா தான்.