Connect with us

Cinema News

சூது கவ்வும் 2 படத்துல விஜய்சேதுபதி நடிக்க மறுக்க இதுதான் காரணமா?.. 3வது பார்ட் வேற வருதாம்!..

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் தான் சூது கவ்வும். அந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.

முதல் பாகத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து மிரட்டிய நிலையில் இரண்டாம் பாகத்தில் அவர் நடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அந்தப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார்.

இதையும் படிங்க: போயஸ் கார்டன்ல பொண்ணு கேட்குதோ!.. தனுஷ் குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமை.. பிரபலம் சொன்ன சீக்ரெட்!..

நலன் குமாரசாமிக்கு பதிலாக அர்ஜுன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் சி.வி. குமார் சூது கவ்வும் என்கிற டைட்டில் இந்தப் படத்துக்கும் முதலாக வைக்கவில்லை. பிளாக் டிக்கட் எனும் தலைப்பு தான் நலன் குமாரசாமி சொன்னது. அதன் பின்னர், தலைப்பு சற்று மாற்றப்பட்டது. கடைசியாக செட்டான டைட்டில் தான் சூது கவ்வும்.

அப்போதே நலன் குமாரசாமி சூதுகவ்வும் என தலைப்பு வைத்து படம் எடுக்கிறோம். இதை தர்மம் வெல்லும் என அடுத்த பார்ட் எடுத்து நிறைவு செய்ய வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்காக சம்பளத்தை பாதியாக குறைத்த ஹாலிவுட் நடிகர்!.. அந்த படம் மட்டும் வந்திருந்தா!..

இந்நிலையில் சூதுகவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் என்கிற தலைப்பில் தற்போது உருவாக்கியுள்ள நிலையில், மூன்றாவதாக சூது கவ்வும் 3ம் பாகத்துக்கு தர்மம் வெல்லும் எனும் தலைப்பு வைத்து இன்னொரு படத்தையும் உருவாக்கி வருகிறோம் எனக் கூறியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முதலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவருக்கு இரண்டாம் பாகத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை. ஒரு படத்தை எடுத்து விட்டோம் அதை டிஸ்டர்ப் பண்ணாமல் விட்டுவிட்டு புதிதாக கொடுக்க வேண்டும் என்பது அவரது சிந்தனையாக உள்ளது. அதன் காரணமாகவே இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக காமெடியாக நடிக்கக்கூடிய ஒரு நடிகரை தேர்வு செய்த போதுதான் மிர்ச்சி சிவா இந்த படத்தில் ஹீரோவாக மாறினார் என படத்தின் தயாரிப்பாளர் சி.வி. குமார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நான் அப்பவே இறந்திருப்பேன்! உருக்கமாக பேசிய ராமராஜன்.. இப்படியெல்லாம் நடந்திருக்கா

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top