Cinema News
ரஜினி சொன்ன டைட்டில்! கமல் ஆஃபிஸில் எடிட்டிங்.. சூப்பர் ஹிட்டான அஜித்தின் அந்தப் படம்
Actor Ajith: மூத்த நடிகர்கள் பெரும்பாலும் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத்தான் இருக்க வேண்டும். அந்த வகையில் ரஜினி, கமல் இருவருமே இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு பல வகைகளில் உதவியாகவும் முன்னுதாரணமாகவும்தான் இருந்து வருகிறார்கள். அவர்களுக்குள் நல்ல நட்புடனும் இருந்து அதை மற்றவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என அவ்வப்போது மேடைகளில் பதிவு செய்தும் வருகின்றன.
இந்த நிலையில் அஜித்தின் படத்தில் ரஜினியும் கமலும் எந்த அளவுக்கு ஈடுபாடுட்டுடன் இருந்திருக்கிறார்கள் என்பதை பற்றி கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ரவிக்குமார் பஞ்சதந்திரம் படத்தில் பிஸியாக இருக்கும் போது சுரேஷ் சக்கரவர்த்தி அஜித்தின் கால்ஷீட் தன்னிடம் இருப்பதாகவும் அவருக்காக ஒரு படம் பண்ணவேண்டும் என்றும் ரவிக்குமாரிடம் சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: சூது கவ்வும் 2 படத்துல விஜய்சேதுபதி நடிக்க மறுக்க இதுதான் காரணமா?.. 3வது பார்ட் வேற வருதாம்!..
அதுமட்டுமில்லாமல் படத்தை தீபாவளி நேரத்தில் ரிலீஸ் செய்யவேண்டும் என்றும் படத்திற்கு வில்லன் என்ற பெயரையும் வைக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். உடனே ரவிக்குமார் கதை இல்லாமல் வெறுமனே டைட்டில் மட்டும் சொல்றீங்க? அதுவும் தீபாவளி ரிலீஸ் என படத்தை வேகமாக முடிக்க முடியாது என கதை விவாதத்தில் ஈடுபட்டார்களாம். அந்த நேரத்தில்தான் யூகி சேது சொன்ன கதைதான் இந்த வில்லன் பட கதை என ரவிக்குமார் கூறினார்.
அதன் பிறகு படத்தை ஆரம்பித்து வில்லன் பட கதை எடிட்டிங் முழுவதும் கமல் ஆஃபிஸில்தான் நடந்ததாம். அதன் பிறகும் அஜித்தின் கால்ஷீட் ரவிக்குமாருக்கு சென்றிருக்கிறது. அதுதான் வரலாறு பட கதை. முதலில் காட் ஃபாதர் என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.இந்தப் படத்தின் கதை முதலில் கமலுக்காக சொல்லப்பட்ட கதையாம். ரஜினிக்கும் தெரியுமாம்.
இதையும் படிங்க: போயஸ் கார்டன்ல பொண்ணு கேட்குதோ!.. தனுஷ் குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமை.. பிரபலம் சொன்ன சீக்ரெட்!..
அதனால் இது அஜித்துக்கு பண்ணப் போகிறார் என்று தெரிந்தும் ரஜினி காட் ஃபாதர் என்ற டைட்டிலுக்கு பதிலாக ‘மதனா’ என்று டைட்டில் சொன்னாராம். ஆனால் அது கடைசியாக வரலாறு என மாற்றப்பட்டது. இதை பற்றி கூறும் போது விஜய் சேதுபதி மற்றும் சரத்குமாருக்கு முன்பாகவே ஒரு டாப் ஹீரோ திருநங்கை வேடத்தில் நடித்திருக்கிறார் என்றால் அது அஜித்தான். இவர்தான் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார் என ரவிக்குமார் கூறினார்.