என்ன அண்ணே இது… ஃபகத் பாசிலுக்கு ஓவர் பில்டப் கொடுத்தது வீணா போச்சே.. வேட்டையனில் என்ன கேரக்டர் தெரியுமா?

Published on: April 10, 2024
---Advertisement---

Fahad Fasil: தமிழ் சினிமாவில் சமீபகாலமாகவே வில்லன் ரோலில் கலக்கி வருகிறார் ஃபகத பாசில். ஆனால் தன்னுடைய அடுத்த படமான ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் புதுவிதமான ரோலில் நடிக்க இருக்கிறாராம்.

மலையாளத்தில் ஹிட் நாயகனாக வலம் வந்தவர் ஃபகத் பாசில். அவரின் குணசித்திர நடிப்பு அவருக்கு பல மொழிகளில் வாய்ப்பு வழங்கியது. புஷ்பா படத்தில் சில நிமிடங்கள் வந்தாலும் அவரின் நடிப்பு அப்ளாஸ் வாங்கியது. இதையடுத்து கமலின் விக்ரம் படத்தில் அமர் என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: திடீரென கன்னத்தில் ரஜினி செய்த ’அந்த’ விஷயம்… ரம்பாவை தொடர்ந்து அடுத்து ஷாக் சொன்ன நடிகை…

ஒரே படத்தில் பல பரிணாமங்களை காட்டி அசத்தினார். இதையடுத்து தமிழில் மாமன்னன் படத்தில் வில்லன் வேடம் ஏற்று இருந்தார். ரத்தமில்லாமல் நடிப்பாலே ரசிகர்களை மிரட்டி அலறவிட்டு பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவித்தார். இதையடுத்து தமிழிலும் அவருக்கு கணிசமான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அதில் ரஜினிகாந்துடன் வேட்டையன், வடிவேலுவுடன் ஒரு படம் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் ரஜினிகாந்த் படத்தில் கொடூர வில்லனாக இருப்பார். அவர் பையனா வரும் ஃபகத் வில்லன்களுக்கு துணை போகும் கேரக்டராக இருப்பார் என்றே கிசுகிசுக்கப்பட்டது.

இதையும் படிங்க: என்ன நடிகன்னு நினைச்சியா!.. தப்பு செய்தவரை எட்டி உதைத்த எம்ஜிஆர்!. ராமாவரம் தோட்டத்து ரகசியங்கள்..

ஆனால் தற்போது அதற்கு எதிராக ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது ஃபகத் பாசில் காமெடி ரோலில் தான் வேட்டையன் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதனால் அப்செட் என்றாலும் ரஜினியுடன் அவருக்கு சில முக்கிய காட்சிகள் இருப்பதால் கொஞ்சம் சமாதானம் ஆகி இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.