Cinema History
விஜயகாந்தை வைத்து படமெடுத்த எம்.ஜி.ஆர் பட இயக்குனர்கள்!. அட இத்தனை பேரா!..
எம்.ஜி.ஆருக்கும், விஜயகாந்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்து, மக்களின் பிரச்சனைகளை பேசும் கதாபாத்திரங்களில் நடித்து, ஆக்ஷன் காட்சிகளில் அசத்தலாக நடித்து, தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி அதை பயன்படுத்தி அரசியலுக்கு வந்தவர்கள் இருவரும். குறிப்பாக இருவருமே மக்களுக்கு அள்ளி கொடுக்கும் கொடை வள்ளலாக இருந்து மக்களின் அபிமானத்தை பெற்றவர்கள்.
மதுரையில் டீன் ஏஜில் சினிமா பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த விஜயகாந்த் தீவிர எம்.ஜி.ஆர் பட ரசிகராகவே இருந்திருக்கிறார். அதுதான் அவரை சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது. அதேநேரம், சினிமாவில் பெரிய நடிகரான பின்பும் பாக்கியராஜ், சத்தியராஜ் போல எம்.ஜி.ஆருடன் ஒரு நட்பை விஜயகாந்த் உருவாக்கி கொள்ளவில்லை. அதேநேரம், எம்.ஜி.ஆரை வைத்து படங்களை இயக்கிய சில இயக்குனர்களின் படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார். அது பற்றி இங்கு பார்ப்போம்.
இதையும் படிங்க: விஜயகாந்த் இல்லாமலும் ஹிட்டு கொடுப்பேன்!.. சரித்திர சாதனையை நிகழ்த்திய இணைந்த கைகள்!..
முதலில் நாம் பார்க்கப்போவது டி.ஆர்.ராமண்ணா. எம்.ஜி.ஆரை வைத்து குலோபகாவலி, கூண்டுக்கிளி, புதுமை பித்தன், பெரிய இடத்து பெண், பணக்கார குடும்பம், பணம் படைத்தவன், பறக்கும் பாவை ஆகிய படங்களை ராமண்ணா இயக்கி இருக்கிறார். இவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய படம் ‘சட்டம் சிரிக்கிறது’. இந்த படம் 1982ம் வருடம் வெளியானது.
எம்.ஜி.ஆரை வைத்து தெய்வத்தாய் என்கிற படத்தை இயக்கியவர் பி.மாதவன். இவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய படம்தான் ‘சத்யம் நீயே’. இந்த படம் 1984ம் வருடம் வெளியானது. இப்படத்தில் இளவரசியும் நடித்திருந்தார். எம்.ஜி.ஆரை வைத்து ‘சங்கே முழங்கு’ படத்தை இயக்கியர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். விஜயகாந்தை வைத்து இவர் இயக்கிய படம்தான் ‘காவிய தலைவன்’.
இதையும் படிங்க: முதல்ல தமிழ் கத்துக்கிட்டு வந்து என்கிட்ட பேசு!.. பிரபல நடிகையை விரட்டிய விஜயகாந்த்…
எம்.ஜி.ஆரை வைத்து இதயக்கனி என்கிற மெகா ஹிட் படத்தை கொடுத்த ஏ.ஜெகந்நாதன் விஜயகாந்தை வைத்து ‘நாளை உனது நாள்’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு பணத்தோட்டம், சந்திரோதயம், கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில், அடிமைப் பெண், பல்லாண்டு வாழ்க, இன்று போல் என்றும் வாழ்க, உழைக்கும் கரங்கள் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கே.சங்கர்.
இவர் விஜயகாந்தை வைத்து தம்பி தங்க கம்பி, வேலுண்டு வினையில்லை, நம்பினார் கெடுவதில்லை, மீனாட்சி திருவிளையாடல், நவகிரஹ நாயகி ஆகிய 5 படங்களை இயக்கி இருக்கிறார்.