ரஜினி படம்தானே.. அப்படித்தான் இருக்கும்! பங்கமாய் கலாய்த்த ஜெய்சங்கர்

Published on: April 12, 2024
jai
---Advertisement---

Rajini Jai Sankar: தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்தான் நடிகர் ஜெய்சங்கர். இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் நடிகராக அறிமுகமான ஜெய்சங்கர் தொடர்ந்து ஹீரோவாக சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெள்ளி விழாவாக அமைந்ததுதான் சிறப்பு.

அதுவும் வாரத்திற்கு ஒரு படம் வீதம் வெள்ளிக்கிழமைகளில் ஜெய்சங்கர் படம் வெளிவராமல் இருந்ததே இல்லை. இதனாலேயே இவரை வெள்ளிக்கிழமை நாயகன் என்றும் அழைப்பதுண்டு. சினிமாவில் ஒரு பக்கம் பேரும் புகழோடு இருந்தாலும் நிஜவாழ்க்கையிலும் பெருங்குணம் படைத்தவராகவே இருந்திருக்கிறார் ஜெய்சங்கர்.

இதையும் படிங்க: படையப்பா படத்தில் ஷாலினி அஜித்தா? ஆனா பொண்ணு ரோல் இல்லையாம்… ஏகப்பட்ட சுவாரஸ்யமால இருக்கு!…

ஏராளமானோர்க்கு பல உதவிகளை இலவசமாக செய்திருக்கிறார். இவரது மகன் விஜய் சங்கர் பிரபல கண் மருத்துவராக இருக்கிறார். ஜெய்சங்கர் சொல்லி பலாயிரக்கணக்கானவர்களுக்கு இன்று வரை இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறார். ஜெய் சங்கர் நடித்த வரை ஹீரோவாகவே நடித்திருக்கிறார். இந்த நிலையில் முரட்டுக்காளை படத்தில் ரஜினிக்கு வில்லனாக என ஜெய்சங்கரை அணுகிய போது முதலில் ஜெய்சங்கர் தயங்கியிருக்கிறார்.

அதன் பின் நடித்து வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ரஜினியுடன் படிக்காதவன், அருணாச்சலம் போன்ற படங்களில் ஜெய்சங்கர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அருணாச்சலம் படத்தின் போது ஜெய்சங்கர் எப்பொழுதும் காலை 10 மணிக்குத்தான் சூட்டிங் வருவார். அவரை அதிகாலை படப்பிடிப்பிற்கு எதிர்பார்க்காதீர்கள்.அவர் வந்த பிறகு ஷாட் வைத்துக் கொள்ளலாம் என்று ரஜினி முன் கூட்டியே சொல்லிவிடுவாராம்.

இதையும் படிங்க: அந்த நடிகரை பாராட்டிய நடிகர் திலகம்!.. ஏமாந்து போன கமல்!.. உயிர கொடுத்து நடிச்சும் இப்படியா?!..

மேலும் ஜெய்சங்கர் பெரிய நடிகர். அவருக்கு தேவையானதை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிடுவாராம். ஜெய்சங்கர் வந்த பிறகு அவரிடம் கதை சொல்ல சுராஜ் சென்றிருக்கிறார். போனதும் ஸ்கிரிப்ட் படி ரஜினி இங்கே வருகிறார். அங்கே நிற்கிறார். இந்த டையலாக்கை பேசுகிறார் என்றே சொல்லிக் கொண்டிருந்தாராம். உடனே ஜெய்சங்கர் சுராஜை நிறுத்தி ‘சரி நான் எங்கு வருகிறேன்?’ என கிண்டலாக கேட்டிருக்கிறார்,

உடனே சுராஜ் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைக்க அதற்கு ஜெய்சங்கர் ‘சரி சரி ரஜினி படம்தானே? தெரியும் தெரியும்’ என்று சொல்லிவிட்டு சிரித்திருக்கிறார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் விஷ்ணுவுக்கு அடித்த லாட்டரி! காத்திருப்புக்கு கிடைச்ச பலன்.. என்ன மேட்டர் தெரியுமா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.