
Cinema News
சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யனும்னா இது போதாது! பேசுன சம்பளத்தை விட அதிகமாக கேட்ட எம்ஜிஆர்
Published on
By
Actor MGR: எம்ஜிஆர் மறைந்து 30 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அவரை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் அவர் செய்த நற்செயல்கள், அற்பணிப்புகள் , மக்களுக்காக அவர் செய்த தியாகங்கள்தான் காரணம். ஒருவர் தன் வாழ்வில் பெரும் புகழை அடைய வேண்டுமென்றால் சிலவற்றவைகளை தியாகம் செய்யத்தான் வேண்டும்.
எம்ஜிஆர் தன் வாழ் நாள் முழுக்க மக்களுக்காகவே ஓடி ஓடி உழைத்தார் என்றுதான் சொல்லவேண்டும். இப்படி எம்ஜிஆரை பற்றி பல விஷயங்களை நாம் அறிந்து கொண்டே போகலாம். இந்த நிலையில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் எம்ஜிஆரை பற்றி ஒரு விஷயத்தை நம்மிடையே பகிர்ந்தார்.
இதையும் படிங்க: தனுஷை அசிங்கப்படுத்தினாரா லதா ரஜினிகாந்த்?!.. விவாகரத்து பின்னாடி இவ்வளவு கதை இருக்கா!..
எம்ஜிஆர் நடிப்பில் சக்க போடு போட்ட படம் ‘அன்பே வா’. இந்தப் படம் மிகவும் கலர்ஃபுல்லாக பார்ப்பதற்கே மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும். நாகேஷின் காமெடி அல்ட்ரா லெவல் என்று சொல்லலாம். எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடிக்க படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்தப் படத்திற்கு முதலில் எம்ஜிஆரிடம் பேசப்பட்ட சம்பளம் 3 லட்சமாம்.
சம்பளம், கால்ஷீட் பற்றி எல்லாம் பேச்சு வார்த்தை முடிந்த பின் ஏவிஎம் சரவணன் ஜனவரி 14 எனக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என கூறினாராம். உடனே எம்ஜிஆர் அப்படி என்றால் வீரப்பனிடம்தான் கேட்கவேண்டும். ஏற்கனவே வீரப்பனின் நான் ஆணையிட்டால் படமும் அன்றுதான் கேட்டிருக்கிறார். அதனால் அவரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறினாராம் எம்ஜிஆர்.
இதையும் படிங்க: எல்லாத்தையும் கொடுத்துட்டு தெருவுல நிக்கவா?!.. மனுஷனை இப்படி கோபப்பட வச்சிட்டாங்களே..
ஏவிஎம் சரவணன் வீரப்பனை சந்தித்து இந்த மாதிரி படம் எனக்கு ஜனவரி 14 ரிலீஸ் ஆகவேண்டும் என கூற வீரப்பன் ‘அப்படி என்றால் பேசுன சம்பளத்தை விட 25000 அதிகமாக கொடுங்கள். நான் என் படத்தை தள்ளிப் போடுகிறேன்’ என்று கூறினாராம். இதை பற்றி கூறிய ஏவிஎம் சரவணன் ‘இதை எம்ஜிஆர் கேட்க சொன்னாராம் இல்லை வீரப்பனே கேட்டாரா என தெரியவில்லை. நான் கேட்ட தேதிக்கு படம் வந்துவிட்டது. அது போதும் என 25000 அதிகமாக 325000 சம்பளமாக எம்ஜிஆரிடம் கொடுத்தேன்’ என சரவணன் கூறினார்.
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...