Connect with us
Dhanush , Simbu

Cinema News

17 முறை தனுஷுடன் மோதிய சிம்பு படங்கள்!.. வசூலை அள்ளியது யார்?!.. வாங்க பார்ப்போம்!..

தனுஷூம், சிம்புவும் திரையுலகிற்கு சமகாலத்தில் வந்த நடிகர்கள். இருவருமே வாரிசு நடிகர்கள். இருவரது படங்களும் 17 முறை மோதியுள்ளன. ஜெயித்தது யாருன்னு பார்ப்போமா…

2003ல் தனுஷ_க்கு திருடா திருடி படமும், சிம்புவுக்கு அலை படமும் ரிலீஸ். இதுல தனுஷ் தான் வின்னர். 2004ல் சிம்புவுக்கு கோவில் படமும், தனுஷூக்கு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படமும் ரிலீஸ். இதுல சிம்பு தான் வின்னர். அதே ஆண்டில் சிம்புவுக்கு மன்மதன், தனுஷூக்கு ட்ரீம்ஸ் படமும் ரிலீஸ். இதுல சிம்பு தான் வின்னர்.

இதையும் படிங்க…பேரு பட்டைய கிளப்பி என்ன புண்ணியம்… படம் வரலையே பாஸ்… கமல்ஹாசன் மிஸ் செய்த 5 சூப்பர் ஹிட்டுக்கள்!…

2005ல் சிம்புவுக்கு தொட்டி ஜெயா, தனுஷூக்கு அது ஒரு கனாக்காலம் ரிலீஸ். இதுல ரெண்டுமே பிளாப். 2006ல் சிம்புவுக்கு வல்லவன், தனுஷூக்கு திருவிளையாடல் ஆரம்பம் ரிலீஸ். இதுல ரெண்டு பேருக்குமே வெற்றி. 2008ல் சிம்புவுக்கு சிலம்பாட்டம், தனுஷூக்கு படிக்காதவன் படமும் ரிலீஸ். இதுல இருவருமே வின்னர்.

2010ல் சிம்புவுக்கு விண்ணைத் தாண்டி வருவாயா, தனுஷூக்கு குட்டி ரிலீஸ். இதுல சிம்பு தான் வின்னர். 2011ல் தனுஷூக்கு மாப்பிள்ளை படம், சிம்புவுக்கு வானம் ரிலீஸ். இதுல இருவருமே வின்னர். அதே ஆண்டில் தனுஷூக்கு மயக்கம் என்ன, சிம்புவுக்கு ஒஸ்தி ரிலீஸ். இதுல தனுஷ் தான் வின்னர்.

Vaalu, Maari

Vaalu, Maari

2015ல் தனுஷூக்கு மாரி, சிம்புவுக்கு வாலு ரிலீஸ். இதுல தனுஷ் தான் வின்னர். 2016ல் தனுஷூக்கு கொடி, சிம்புவுக்கு அச்சம் என்பது மடமையடா ரிலீஸ். இதுல சிம்பு தான் வின்னர். 2017ல் தனுஷூக்கு வேலையில்லா பட்டதாரி 2, சிம்புவுக்கு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ரிலீஸ். இதுல தனுஷ் தான் வின்னர்.

2018ல் தனுஷூக்கு வடசென்னை, சிம்புவுக்கு செக்கச் சிவந்த வானம் ரிலீஸ். இதுல இருவருமே வின்னர். அதே ஆண்டில் தனுஷூக்கு மாரி 2, சிம்புவுக்கு வந்தா ராஜாவா தான் வருவேன் படமும் ரிலீஸ். இதுல தனுஷ் தான் வின்னர்.

2021ல் சிம்புவுக்கு மாநாடு, தனுஷூக்கு கலாட்டா கல்யாணம் ரிலீஸ். இதுல சிம்பு தான் வின்னர். 2022ல் சிம்புவுக்கு வெந்து தணிந்தது காடு, தனுஷூக்கு நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ரிலீஸ். இதுல திருச்சிற்றம்பலம் தனுஷ் தான் வின்னர். 2023ல் தனுஷூக்கு வாத்தி, சிம்புவுக்கு பத்து தல ரிலீஸ். இதுல தனுஷ் தான் வின்னர்.

 

 

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top