கோயிலுக்காக இடம் கேட்டு தர மறுத்த அர்ஜூன்! பின்னாளில் அவருடைய இடத்திற்கு வந்த ஆபத்து

Published on: April 14, 2024
arjun
---Advertisement---

Actor Arjun: தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்காக அறியப்பட்டவர் அர்ஜூன். தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு முன்னணி நடிகராக 90கள் காலகட்டத்தில் வலம் வந்தார். தாய் நாட்டுப்பற்று மிக்கவரான அர்ஜூன் பெரும்பாலான படங்களில் போலீஸ் அதிகாரியாகவே நடித்திருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்திற்கு கனக் கச்சிதமாக பொருந்தக் கூடிய நடிகர்களில் அர்ஜூனும் ஒருவர்.

ஹீரோவாக நடித்து மக்களின் அபிமானங்களை பெற்ற அர்ஜூன் சமீபகாலமாக வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். விஜயுடன் அவர் கடைசியாக நடித்த லியோ படத்தில் ஒரு முரட்டு வில்லனாக நடித்து மிரட்டினார். அதனை தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: 17 முறை தனுஷுடன் மோதிய சிம்பு படங்கள்!.. வசூலை அள்ளியது யார்?!.. வாங்க பார்ப்போம்!..

இந்த நிலையில் அர்ஜூனின் மகளும் தம்பி ராமையா மகளும் காதலித்து வர சமீபத்தில்தான் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இவர்களுடைய திருமணம் அர்ஜூனுக்கு சென்னையில் சொந்தமான போரூரில் இருக்கும் அவருடைய இடத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அங்குதான் அர்ஜூன் பெரிய ஆஞ்சநேயர் கோயிலை கட்டி பிரம்மாண்டமாக கும்பாபிஷேகமும் நடத்தினார்.

அந்த கோயில் கட்டியதற்கு பின்னனியில் ஒருபெரிய கதையே இருப்பதாக வலைப்பேச்சு அந்தனன் கூறினார். சாலிகிராமத்தில் அர்ஜூன் சொந்தமாக ஒரு வீடு ஒன்றை கட்டினாராம். அதற்கு பக்கத்தில் ஒரு அம்மன் கோயில் இருந்ததாம். கோயில் கமிட்டி ஆள்கள் அர்ஜூனிடம் வந்து ‘கோயிலுக்கு வருபவர்கள் கோயிலை சுற்றி வழிபடுவதற்கு கொஞ்சம் இடம் வேண்டும். அதனால் உங்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் கொஞ்சம் இடம் ஒதுக்கி தாருங்கள்’ என கேட்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: பா.ரஞ்சித் செய்தது தவறா?.. ரஜினிக்கு இதெல்லாம் தெரியாதா?!.. பிரபலம் சொல்றத கேளுங்க!…

ஆனால் அர்ஜூன் அதெல்லாம் தரமுடியாது என சொல்ல அதன் பிறகு அர்ஜுன் வீட்டில் பாம்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்திருக்கின்றன. இதனால் அந்த வீட்டையே காலி செய்து போய்விட்டாராம் அர்ஜூன். அதன் பிறகே போரூரில் ஆஞ்சநேயர் கோயிலை கட்டினாராம் அர்ஜூன். அம்மனுக்கு ஏற்பட்ட கோபத்தை ஆஞ்சநேயர் கோயில் கட்டி சமாதானப்படுத்தினார் அர்ஜூன் என வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.