Cinema History
அந்த ரெண்டு நடிகைகள் கூட நடிக்கதான் ரொம்ப பிடிக்கும்! இப்படி போட்டு உடைச்சிட்டாரே ரஜினி!
தமிழ்த்திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து 40 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர் நடிகை மீனா. 80ஸ் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த விழா கடந்த ஆண்டு சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.மீனா 40 விழாவில் ரோஜா, தேவயாணி, ராதிகா உள்பட பலர் பங்கேற்றனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியது இதுதான்…
நான் 50 ஹீரோயின்கள் கூட நடிச்சிருக்கேன். நான் விரும்பி நடிச்சது ரெண்டு ஹீரோயின்கள். அவங்க கூட நடிச்சதை சொன்னா யாரும் கோபப்பட மாட்டாங்க. ஏன் அவங்க கூட நடிக்கிறதுக்கு விரும்பறேன்னு அவங்களுக்கே தெரியும். அவங்க யாருன்னா ஒண்ணு ஸ்ரீதேவி, இன்னொன்னு மீனா.
இதையும் படிங்க… தலைவர்171 படத்தில் அந்த நடிகரா…? 38 வருஷத்துக்கு பின்னர் நடக்க இருக்கும் மேஜிக்…
ஸ்ரீதேவி கூட குழந்தை நட்சத்திரம் தான். மூன்று முடிச்சு படத்துல நடிக்கும்போது ஸ்ரீதேவிக்கு 15 வயசு. எங்கேயோ கேட்ட குரல் படத்தில் 6 வயசு சிறுமியாக மீனா நடித்தார். 82ல் நண்பர் பெரிய எழுத்தாளர் நடராஜர் எங்கிட்ட கேட்டாங்க. டைரக்ட் பண்ற சான்ஸ் வந்துருக்கு. தூயவன் கதை சொல்லிருக்காரு. அது எம்ஜிஆருக்காக சொன்ன கதை.
அவரு அந்தக் கதையைக் கேட்டு நான் நடிக்கிறேன்னு சொன்னாராம். ஒரு சின்னக்குழந்தை வந்து எம்ஜிஆர் மேல அவ்வளவு பிரியமாக இருக்குற கதை. அப்போ எம்ஜிஆர் சிஎம் மா ஆகிட்டாரு. இப்போ நீ வந்து பண்ணுனா நல்லாருக்கும்னு சொல்ல யாரு அந்தப் பொண்ணுன்னு கேட்டா அது மீனான்னு சொன்னாங்க. அது அன்புள்ள ரஜினிகாந்த்.
இந்தப் படத்துல மீனா நல்ல ஒரு பொம்மை மாதிரி, பன்னு மாதிரி, ஒரு அமுல் பேபி மாதிரி இருப்பாங்க. கையை அந்;தக் கேரக்டருக்கேற்ப மடக்கி வச்சிருப்பாங்க. அது பெரிய ஹிட்டாச்சு. அதுக்குப் பிறகு 99ல் ஏவிஎம் பண்ற எஜமான் படத்துல ஆர்.வி.உதயகுமார் இயக்குறார்னு சொன்னாங்க. கதையைக் கேட்டதும் ரொம்ப பிடிச்சிருச்சி. ஹீரோயின் யார்னு கேட்டேன். உடனே மீனான்னு சொன்னாங்க. எந்த மீனான்னு கேட்டேன். அன்புள்ள ரஜினிகாந்த்ல பண்ணுன மீனா. சார்… மீனாவா என்னங்க சொல்றீங்கன்னு கேட்டேன்.
உடனே தெலுங்கு படத்துல இருந்து 2 சாங் போட்டுக் காட்டுனாங்க. நாம பார்த்த இந்த அமுல் பேபி மீனாவா கம்ப்ளீட்டா மாறி இருந்தாங்க. அதுல கொஞ்சம் சீரியஸாவே நடிச்சிருப்பாங்க. அப்புறம் காமெடியாக பண்ணனும்னு வீரா எடுத்தோம்.
ரோஜா, மீனா நடிச்சது. அப்புறம் முத்து. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்துல சூப்பரா வந்தது. மீனாகிட்ட ரொம்ப பிடிச்சது ஒழுக்கம், தொழில் திறமை, சின்சியாரிட்டி, அர்ப்பணிப்பு இதுதான். கதையை நல்லா கேட்டு அதுல எங்க லாஜிக் இருக்குன்னு சொல்வாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.